தேவன் தம்முடைய விசேஷ குணங்களினால் தம்மை அடையாளங்காண்பித்தல் Denham Springs, Louisiana, USA 64-0320 1நான் அங்கே என்னுடைய நண்பர் ஜோசப் போஸ் அவர்களைக்கண்டு ஒரு விதமாக அப்படியே ஆச்சரியமடைந்தேன், எனவே நான் திரும்பி அவருடைய கரத்தைக் குலுக்க சற்று நேரம் எடுத்துக் கொண்டேன். நாம் இப்பொழுது, தேவனுடைய வார்த்தையில் எபிரெயர் 1-ம் அதிகாரத்திற்குத் திருப்புவோமாக. நான் இன்றிரவு ஒரு பாடப் பொருளை எடுக்கும் படியாக ஒரு பாகத்தை, அதாவது 1, 2, 3 வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார். 2நாம் இப்பொழுது ஜெபத்திற்காக நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. இப்பொழுது அவருடைய தெய்வீகப் பிரசன்னத்தில், நீங்கள் எதாவது விண்ணப்பத்தை உடையவராயிருந்து, அதை நீங்கள் அவரிடத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள், அந்த உங்களுடைய விண்ணப்பத்திற்கு, தேவன்... எங்கள் பரலோகப் பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசத்தினாலே நாங்கள் உம்முடைய சிங்காசனத்திற்கு முன்பாக இப்பொழுது வந்து கொண்டிருக்கிறோம். “நாங்கள் அவருடைய நாமத்தில் எதைக் கேட்டாலும், அது அருளப்படும்” என்ற இந்த உறுதி எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீர் எங்களுடைய வாஞ்சைகளையும், எங்களுடைய தேவைகளையும் அறிந்திருக்கிறீர். எங்கள் குறைவையெல்லாம் நீர் நிறைவாக்குவதாக நீர் வாக்குப்பண்ணியிருக்கிறீர். எனவே, பிதாவே, “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று நீர் எங்களுக்கு கற்பித்தது போன்றே நாங்கள் ஜெபிக்க விரும்புகிறோம். அதாவது எங்களுடைய விண்ணப்பம், இன்றிரவு, அதை அருளும்படியான உம்முடைய வாஞ்சையின்படி இருப்பதாக, இந்த சிலாக்கியங்களை எங்களுக்கு அருளும். கர்த்தாவே, வார்த்தையையும், எல்லா பேச்சாளர்களையும், கேட்டவர்களையும் அபிஷேகியும். இன்றிரவு பரிசுத்த ஆவியானவர்தாமே எங்கள் மத்தியில் உள்ளே வந்து வார்த்தையின்படி செய்கிறவராயிருப்பாராக. நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம். 3நாளை காலை முழு சுவிசேஷ வர்த்தக புருஷருடைய காலை சிற்றுண்டி கூட்டம் உள்ளதை நான் அறிவேன். வழக்கமாகவே அவர்களுக்கு அங்கு ஒரு கூட்டுக் குழு உள்ளது. நான் அவர்களுடைய காலை சிற்றுண்டி வேளையில் பேசும் சிலாக்கியத்தை உடையவனாயிருக்கிறேன். இந்த முறை, அது ஒரே ஒரே ஸ்தாபனமாய் உள்ளது, அது ஸ்தாபனமல்ல, ஆனால் அது நான்-நான் சார்ந்துள்ள ஒரேக் குழுவான கிறிஸ்துவ வர்த்தக புருஷராய் உள்ளது. இப்பொழுது நான் அவர்களுக்காக சர்வதேச அளவில் பேசுகிறேன். இப்பொழுது, இன்றிரவு, இந்தக் கூடுகை விருதாவாயிருக்காது என்றே நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம். நான் உங்களிடத்தில் களைப்புற்று, ஒரு களைப்புற்ற கரகரப்பான குரலோடே வந்துள்ளேன், மேலும் சற்று முக்கடைப்பும் பெற்றுள்ளேன்... நான் உண்மையாகவே நல்ல வறண்டுபோயிருக்கிற டூசானிலிருந்து வருகிறேன். நான் இங்கு வந்த போது, இதுவோ உண்மையாகவே நல்ல ஈரப்பசை கொண்டதாயுள்ளது, எனவே இது முற்றிலும் ஒரு வேறுபாடாய் உள்ளது. நீங்கள் எல்லோரும் இங்கே பெற்றுள்ள எல்லா தண்ணீரையும், நீங்கள் அதை அங்கே எங்களுக்கு அனுப்பினால், நாங்கள் அதைப் பாராட்டுவோம். ஆனால் உண்மையாகவே உங்களால் அதைச் செய்ய முடியாது. ஆனால் நான் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்கிறேன், அங்கே ஒரு உவமை உள்ளது. எங்களுடைய-எங்களுடைய எல்லா-அரிசோனாவில் உள்ள எங்களுடைய காரியங்களோ, அதாவது எங்களுடைய மரங்கள் முழுவதும் குத்தும்படியான முட்களைக் கொண்டதாய் உள்ளன. ஒவ்வொரு காரியமும் முட்கள் குத்தும்படியானதாயுள்ளது, ஏனென்றால் அது வறட்சியாயுள்ளது. இப்பொழுது அதே விதமான புதர் இங்கு வளர்ந்திருந்தால், அது அருமையான அழகான இலையை உடையதாயிருக்கும். பாருங்கள், அது தண்ணீரற்றதாயுள்ளது, அந்தக் காரணத்தினால்தான் அது குத்தும் தன்மையாகிவிடுகிறது. சபையும் ஜீவத் தண்ணிரில்லாமலாகும் போது, அது வறண்டு, குத்தும் தன்மையைப் பெற்று, ஒவ்வொரு காரியத்திலேயும் குத்துகிற, குத்துகிறதான நிலையையும் அடைகிறது. ஆனால் அங்கே ஜீவத் தண்ணீர் பாய்ந்தோடும் போது, அது இலையை விரிவடையச் செய்து, அதை மென்மையாய் கனிவாய், இனிமையாய், பரிசுத்தமாய், தேவனுக்கு ஏற்புடையதாக்குகிறது. ஆகையால் நாம் குத்துகிற தன்மை கொண்டவர்களாயிராதபடிக்கு தேவனாகிய கர்த்தர் தண்ணீர் பாய்ச்சுவாராக; அப்பொழுது நாம் வழிப்போக்கரான ஜனங்கள் நம்முடைய மரத்தின் நிழலின் கீழே அமர்ந்து, அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைபாறுதலை கண்டடையும்படியான அருமையான இலைகளாய் இருப்போம். 4இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால், இன்றிரவு நான் எடுக்க விரும்பும் பாடப் பொருள், குரல் சரியில்லாத காரணத்தால், நான் என்னால் முடிந்தளவு இந்த சிறிய ஒலிப்பெருக்கியை எனக்கு அருகில் இழுத்துக் கொள்கிறேன். நான் இங்கு வாசித்த எபிரெயர் 1:1 - லிருந்தே ஒரு பொருளை எடுக்க விரும்புகிறேன், அதாவது, “தேவன் தம்முடைய விசேஷ குணங்களினால் தம்மை அடையாளங்காண்பித்தல்” என்ற ஒரு பொருளையே நான் எடுத்து பேச விரும்புகிறேன். நான் அதை மீண்டும் திருப்பிக் கூறுவேனாக, ஏனென்றால் இந்த ஒலி அமைப்புகள் இங்கே மோசமாக உள்ளன என்பதை நான் அறிவேன். தேவன் தம்முடைய விசேஷ குணங்களினால் தம்மை அடையாளங் காண்பிக்கிறார். இப்பொழுது, பெரும்பாலும் எந்தக் காரியமும் அதனுடைய விசேஷ குணங்களினாலேயே அடையாளங் காட்டப்படுகின்றன. நான் இங்கு ஒரு சில வேதவாக்கியங்களை... ஒரு குறிப்பாக எழுதி வைத்துள்ளேன், எனவே நான் அதைக் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன். இப்பொழுது ஒரு காரியத்தின் விசேஷ குணமே அது என்னவாயுள்ளது என்பதை அடையாளங்காட்டுகிறது. இப்பொழுது எல்லா இயற்கையிலுமே, மலர்கள் அநேக சமயங்களில் அவைகளிடைய விசேஷ பண்பினாலே அடையாளங்காட்டப்படுகின்றன. அவைகள் ஒன்றாக சேர்ந்திருந்தாலும், ஒரு வகையானது மற்றொன்றைப் போல காணப்பட்டாலும், அந்த மலரின் விசேஷித்த பண்பானது அது என்ன மலராயுள்ளது என்பதை அடையாளங்காட்டிவிடும். வன ஜீவியத்தில் அநேக சமயங்களில்... 5நான், நான் ஒரு வேட்டைக்காரன். நீங்கள் வேட்டையாடிக் கொண்டிருக்கிற விலங்கின் விசேஷ குணாதிசயத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் சில சமயங்களில் நிச்சயமாகவே வஞ்சிக்கப்படக் கூடும். உதாரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் மேலே தூரத்தில் உள்ள மலையில் உள்ள செம்மறி ஆடுகளைப் போல. நான் இந்த இலையுதிர் காலத்தில் யூகான் என்ற இடத்தில் இருந்தேன், அப்பொழுது என்னோடிருந்த இரு சகோதரர்கள் இப்பொழுது இங்கிருக்கின்றனர், நாங்கள் அங்கு வேட்டையாடிக் கொண்டிருந்தோம். இப்பொழுது உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையென்றால், நீங்கள் ஒரு ஆட்டையோ அல்லது ஒரு மானையோ பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும்போது, நீங்கல் ஒரு மதி நுட்பமுள்ள வேட்டைக்காரராயிருந்தாலொழிய, உங்களால் அந்த வித்தியாசத்தைக் கூற முடியாது. காரணம், அவைகள் ஒரேவிதமான அடிச்சுவடுகளை உண்டுபண்ணுகின்றன; அவைகள் ஓடும்போது, அவைகளின் அடிச் சுவடுகள் ஒரே விதமாகவே அமைந்துள்ளன. ஆகையால் ஒரு மலையில் உள்ள செம்மறியாடு தன்னுடைய தலையை மறைத்துக் கொண்டு தூரமாக நிற்பதை நீங்கள் காணும்போது, ஏன், நீங்கள் நீங்கள் அந்த வித்தியாசத்தை அறிந்து கொள்ள மாட்டீர்கள். அவைகள் கிட்டத்தட்ட ஒரே அளவு கொண்ட முதுகுப்பகுதியை உடையதாயுள்ளன; அதற்கு மானுக்கு உள்ளதைப் போன்று வெள்ளையாய் இருக்கிறது. எனவே அவைகள் கண்டறிந்து கூறுவது மிகவும் கடினமாயுள்ளது. ஆனால் அதனுடைய கொம்புகள், அவைகளின் கொம்புகளின் மூலம் அதனுடைய குணாதிசயத்தை அடையாளங்காட்டுகின்றன. செம்மறியாடு ஒரு வட்டமாக வளைந்த கொம்பினை உடையதாயிருக்கிறது, ஒரு மானோ கூர்மையாக நேராய் நீண்டு உள்ள கொம்பினை உடையதாயிருக்கிறது. மற்றொரு காரியம், ஒரு மான் இரையுண்ண ஆட்டைப் போல உயரமாய் செல்லாது. அதன் பின்னர் வெள்ளாடு, நடப்பதும் கூட, அதாவது ஒரு வெள்ளாட்டிலும் ஒரு குணாதிசயம் உண்டு. ஒரு செம்மறி ஆடு, அதாவது நீங்கள் மலையின் உயரத்தில் இருக்கும்போது, நீங்கள் அவைகளுக்குள்ளிருக்கிற வித்தியாசத்தை அறிந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவைகள் இரண்டுமே மலையில் உயரத்தில் தான் வாசம் செய்கின்றன. எனவே நீங்கள் அந்த வித்தியாசத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் கவனிப்பீர்களேயானால், ஒரு-ஒரு வெள்ளாடு தான் நடக்கும்போது தள்ளாடுகிறது; ஒரு செம்மறி ஆடு நடக்கும்போது, தன்னுடைய பாதத்தை இந்த விதமாய் நன்கு பதிய வைத்து நடக்கிறது. அது தன்னுடைய அடிச் சுவட்டை விசேஷ குணாதிசய முறையிலேயே ஏற்படுத்துகிறது. நீங்கள் உங்களுடைய வேட்டை மிருகத்தை அது என்ன செய்கிறது என்றும், எப்படி அது செயல்படுகிறது என்றும், அது என்ன புசிக்கிறது என்ற மற்றொரு ஒவ்வொரு காரியத்தின் விசேஷ குணாதிசயத்தைக் கொண்டே அடையாளங்கண்டு கொள்ளமுடியும். அது அதனுடைய விசேஷ குணங்களின் மூலமே தன்னை அடையாளங்காட்டுகின்றன. நீங்கள் ஒன்றைப் பார்த்து மிரட்டும்போது, அதற்கு என்ன சம்பவிக்கிறது என்று பார்த்து, அவைகள் செல்லும் விதத்தை வைத்தே நீங்கள் கூற முடியும். உங்களால் அதை அந்த வித்தியாசமான விலங்குகளின் விசேஷ குணங்களைக் கொண்டே வித்தியாசப்படுத்திக் கூற முடியும். 6அதன்பின்னர் நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் அந்த மஞ்சள் தலைப் பறவை வகையான பறவைகளை இங்கே உடையவர்களாயிருக்கிறீர்களா? அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை ; அவைகளுக்கான சரியான பெயர் மினுக்குமினுக்கென்று ஒளிவிடும் பறவை என்பதாகும், ஜே பறவை என்பதான ஒரு பறவையும் உண்டு. ஒரு ஜே பறவை என்பதும் கிட்டத்தட்ட ஒரு மஞ்சள் தலைப் பறவையின் அளவினையே உடையதாயிருக்கிறது. அந்த இரண்டு பறவைகளும் பறப்பதை நீங்கள் காணும்போது, அவைகள் இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே விதமான பறவையைப் போன்றே இருக்கும். உங்களால் அதன் நிறத்தைக் காண முடியவில்லையென்றாலும், அப்பொழுது அவைகளை அப்படியே கவனியுங்கள், அப்பொழுது அந்த ஒன்று மஞ்சள் தலைப் பறவை என்பதை நீங்கள் கூற முடியும். ஜே பறவையானது ஏறக்குறைய ஒரே நேர்வழியில் பறக்கிறது. ஆனால் மஞ்சள் தலைப்பறவையோ தன்னுடைய செட்டைகளை அடித்துக் கொண்டே, அதாவது அது தன் செட்டைகளை அடிக்கும்போது, அது கீழே இறங்கி, பின்னர் மேலே சென்று, மறுபடியும் கீழே பின்னர் மேலேயென்றே பறக்கிறது. பாருங்கள், அது தன்னை அந்த விதமான ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறது. அப்பொழுது நீங்கள் அந்த மஞ்சள் நிறத் தலைப் பறவை பறக்கிற விதத்தைக் கொண்டு, அந்தப் பறவையின் விசேஷ குணாதிசயத்தைக் கூறிவிட முடியும். நீங்கள் காடை வெளியே வந்து, அது மேலே பறந்து வருகிற விதத்தைக் கவனிப்பீர்களேயானால், நீங்கள் ஒரு சதுப்பு நிலத்தில் இருந்தால், அப்பொழுது கவனித்துப் பாருங்கள், அங்கு காடை இருக்கலாம், ஒரு நீள் அலகு கொண்ட அமெரிக்க மரக்கொத்தியும் இருக்கலாம், வேட்டையாடுபவர்களாகிய நீங்கள் அதை அறிவீர்கள். சிறிய உருவமும் பெரிய அலகுமுள்ள அமெரிக்க மரக்கொத்திகள் மற்றும் சற்று பெரிய உருவமும், சிறிய அலகும் கொண்ட அமெரிக்க மரக்கொத்திகளும் உள்ளன, அவைகள் வெளியே வந்து, அவைகள் பறந்து செல்லும் விதத்தின் மூலமே அவைகள் தங்களை அடையாளங்காட்டுகின்றன. அவைகள் எந்த விதமான பறவைகளாயிருக்கின்றன என்பதை அவைகள் பறக்கின்ற தங்களுடைய குணாதிசயத்தைக் கொண்டே அடையாளங்காட்டுகின்றன. ஆகையால், நீங்கள் அவைகளைக் குறித்து கேள்விப்பட்டிருந்தால் அப்பொழுது நீங்கள் அது என்னவாயிருந்தது என்று, அது புறப்பட்டுச் சென்ற விதத்தைவைத்தே, அதாவது அது என்ன என்பதை அதனுடைய பறக்கும் விசேஷ குணாதிசயத்தின் மூலமே அப்படியே சொல்லிவிட முடியும். 7ஒரு மனிதனையும் ஒரு ஸ்திரீயையும் போல, அவர்கள் இருவருமே மானிடர்களாயுள்ளனர், ஆனால் ஒரு ஸ்திரீ வித்தியாசமான விசேஷ குணாதிசயத்தை ஒரு மனிதனிடத்தில் உடையவனாயிருக்கிறாள். நான் இங்கே கொஞ்சங் காலத்திற்கு முன்னர் சாலமோனையும், ராஜ ஸ்திரீயையுங் குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன். சாலமோனைக் காண வந்த, அந்த பகுத்தறிதலின் வரத்தைக் காண வந்த அந்த தென் தேசத்து ராஜஸ்திரீயின் பேரில் உங்களுக்கு இங்கு என்னுடைய சிறிய செய்தியை பிரசங்கிக்க எனக்கு ஒரு போதும் சந்தர்ப்பங்கிடைக்கவில்லை. நான் இங்கு அண்மையில் அதைக் குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன், அதில் அவர்கள், “சாலமோனுக்கு முன்பாக வைக்கப்பட்ட புதிர்களில் ஒன்று என்னவெனில் இந்த ராஜஸ்திரீ ஒரு ஸ்திரீயை எடுத்து இல்லை பெண்ணை , சரியாகக் கூறினால் ஸ்திரீகளை மனிதரைப் போன்று ஆடையணியச் செய்து நிறுத்தினாள்” என்று குறிப்பிட்டிருந்தனர். அதுவோ அந்த நாளில் அந்நியமானதாயிருந்தது, ஆனால் அது இப்பொழுதோ நிச்சயமாகவே இன்றைக்கு காலத்துக்கொத்த புதுப்பாணிலமைந்ததாயுள்ளது. அது தவறு என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு ஸ்திரீ அதைச் செய்யக் கூடாது என்று வேதம் கூறியுள்ளது. “ஒரு ஸ்திரீ ஒரு புருஷனின் உடையை தரிப்பது அருவருப்பானதாயுள்ளது.” மாறாத தேவன் அதைக் கூறினார், ஆகையால் அதுவே உண்மையானதாய் உள்ளது. ஆகவே சாலமோன் அவர்களை உன்னிப்பாக கவனித்து, அவன் அவர்களை நடக்கச் செய்து, அல்லது ஏதோ ஒரு காரியத்தை செய்ய வைத்து, உடனடியாக, “அது ஸ்திரீ” என்பதை கூறினான் என்று நாம் கண்டறிகிறோம். பாருங்கள், அந்த ஸ்திரீயின் விசேஷ குணத்தினால், அவள் தன்னை கையாண்ட விதத்தினைக் கொண்டு, அவள் புருஷனாயில்லாமல் ஸ்திரீயாயிருந்தாள் என்று அவனால் கூற முடிந்தது. 8ஆகையால் பெரும்பாலும் அந்த விதமாகவே எந்த காரியமும் அதனுடைய விசேஷ குணங்களைக் கொண்டதாயுள்ளது. ஜனங்களில் அநேகர் இடது கை பழக்கமுடையவர்கள் மற்றும் வலது கைப் பழக்கமுடையவர்களுமாய் இருப்பது போன்றேயாகும். அவர்கள் தங்களை கையாளும் விதத்தின் விசேஷ குணங்களைப் பொறுத்ததாய் உள்ளது. அப்பொழுது அவர்கள் தங்களை நடத்திக் கொள்ளும் விதத்தின் மூலமாக, அவர்கள் எப்பொழுதும் வலது கையையோ அல்லது இடது கையையோ நீட்டும் விதத்தைக் கொண்டே அவர் வலது கை பழக்கமுடையவரா அல்லது இடது கை பழக்கமுடையவரா என்பதை உங்களால் கூறிவிட முடியும். நினைவிருக்கட்டும், இயேசு அதைப் போன்று ஒரு காரியத்தை உடையவராயிருந்தார், அதாவது... கிட்டத்தட்ட இரண்டு கரங்களுமே...அவைகள் ஒரே விதமாக இருக்கின்றன. அவைகள் ஒரேவிதமான கட்டை விரல் அச்சுகளையும், கைரேகைகளையும், ஐந்து விரல்களையும், அதாவது சிறிய ஆள்காட்டி விரல் போன்றவற்றை உடையதாயிருக்கின்றன். வலது கையைப் போலவே இடது கையும் ஒரேவிதமான விரல்களையும், அதேவிதமாகவும், சாதாரணமாகவும், ஒரே அளவுடைய கரமாகவும், சரியாக அதேவிதமாகவும் உள்ளது. அவைகளுக்குள்ளிருக்கிற ஒரே வித்தியாசம் ஒன்று இடதாகவும் மற்றொன்று வலதாகவும் உள்ளது. அந்த ஒரே வித்தியாசத்தை மாத்திரமே உங்களால் கூற முடியும். ஒன்று இடதாகவும், மற்றொன்று வலதாகவும் உள்ளது. ஆகையால் அப்பொழுது அதில், இயேசு கூறினர். நான் இங்கே ஒரு சிறிய முக்கியமான விசேஷயத்தை கூறவுள்ளேன். இயேசு மத்தேயு ;24-ல், “ஆவியின் விசேஷ குணங்கள் இந்த கடைசி நாட்களில் சற்று ஒரே விதமாக இருக்கும், எனவே அது கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவிற்கு மிகவும் நெருக்கமாயிருக்கும்” என்று கூறினார். பாருங்கள், அவைகள் அப்படியே... இருக்கும்... நீங்கள் உங்களுடைய கரத்தை எடுத்து, அதை அப்படியே உயர்த்திப் பிடியுங்கள். நீங்கள் கவனிக்கவில்லையென்றால், பாருங்கள், அவைகளில் ஒன்று மற்றொன்றைப் போலவே ஒவ்வொரு விதத்திலும் காணப்படுகிறது, ஆனால் அவைகளில் ஒன்று இடதாகவும் மற்றொன்று வலதாகவும் உள்ளது. அந்தவிதமாகவே கடைசி நாளில் ஆவிகள் இருக்கின்றன. அவைகள் சற்று ஒரேவிதமாகவே இருக்கின்றன, ஆனால் அவைகளை அடையாளங்காட்டுகிற விசேஷ குணங்களை அவைகள் உடையவைகளாயிருக்கின்றன. ஒன்று சரியானதாயும் மற்றொன்று தவறானதாயுமுள்ளது, அதை அதனுடைய விசேஷ குணத்தினாலே அடையாளங்கண்டு கொள்ள முடியும். 9தேவனுடைய ஆவியை அதனுடைய விசேஷ குணத்தினாலே அடையாளங் கண்டு கொள்ள முடியும். புரிகிறதா? தேவனுடைய ஆவி மற்றும் சபையினுடைய ஆவி. சபை ஆவி ஒன்று உண்டு, சபை ஆவியைப் போன்றில்லாத முற்றிலுமானதான ஒரு தேவனுடைய ஆவியும் உண்டு. ஒரு ஸ்தாபன ஆவியும் உண்டு. ஒரு தேசிய ஆவி உண்டு. ஒரு தேசத்தின் ஆவியும் உண்டு. ஒவ்வொரு தேசத்திற்குள்ளும் நான் செல்லும் போது, நீங்கள் அங்கே உள்ளே செல்லும் போது, நீங்கள் ஒரு வித்தியாசமான ஆவியைக் கண்டறியலாம். நான் பின்லாந்திற்குச் சென்றேன், அருமையான ஜனங்கள், ஆனால் அங்கே ஒரு பின்லாந்தின் ஆவி இருந்தது. நான் ஜெர்மனிக்குச் செல்லுகிறபோது, அங்கு ஒரு ஜெர்மானிய ஆவி உள்ளது. 10இங்கே அண்மையில், நான் மனைவியோடு சென்று கொண்டிருந்தேன், நாங்கள் அப்பொழுது இந்தியானாவில் வசித்து வந்தோம், ஒரு சில வருடங்களுக்கு முன்னர் நாங்கள் சிறு சிறப்பங்காடிக்கு சென்று கொண்டிருந்தோம். நான் அப்பொழுது வெளியிலிருந்து வீட்டிற்கு வந்திருந்தேன். எனவே நாங்கள் சில ஆகாரத்தை வாங்க செல்ல வேண்டியதாயிருந்தது. அங்கே நாங்கள் என்னுடைய சாலையில் சென்று கொண்டிருந்தபோது.. அது கோடைகாலமாயிருந்தது, நீங்கள் இதை நம்பாமலிருக்கலாம். ஆனால் ஒரு பெண்மணி சரியாக முழுமையாய் உடை உடுத்தியிருந்ததை நாங்கள் கண்டோம். அது மிகவும் விநோதமாயிருந்தது, எனக்கு.. அதுவோ என்னை அதிர்ச்சியாக்கிவிட்டது. அப்பொழுது நான்-நான், “அங்கே நோக்கிப் பார், அது விநோதமாக காணப்படுகிறது, அந்த ஸ்திரீ முழுமையாக சரியாக ஆடை அணிந்திருக்கிறாளே” என்றேன். மற்றவர்கள். அந்த ஸ்திரீயைப் போன்ற ஆடையணிந்து கொண்டிருக்கவில்லை. அப்பொழுது அவள் கூறினாள். நான், “அது அமெரிக்க ஆவியாயுள்ளது, பார், அமெரிக்காவின் ஆவி” என்றேன். இப்பொழுது, அமெரிக்காவின் ஆவி, இது ஒரு... ஒரு கிறிஸ்தவ தேசமாயிருக்க வேண்டும், ஆனால் இந்த தேசத்தின் ஆவி கிறிஸ்தவனாயிருக்கவில்லை. இது ஒரு கிறிஸ்தவ தேசம் என்று அழைக்கப்படலாம், ஆனால் அது குணாதிசயத்தில் அதிலிருந்து பத்து இலட்சம் மைல்கள் தூரத்தில் உள்ளது. ஆகையால், இந்த ஸ்திரீ, நான் கூறினேன்... அப்பொழுது என் மனைவியோ, “நாம் அமெரிக்கர்களல்லவா?” என்று கூறினாள். அதற்கு நான், “இல்லை. நாம் இங்கே வசிக்கிறோம். இது நம்முடைய தேசமாயுள்ளது. நாம்-நாம்- நாம் இதில் தங்கியிருக்கிறோம். நாம் இதை நேசிக்கிறோம். இது உலகத்திலே மிகச் சிறந்த தேசமாய் உள்ளது. ஆனால், அதே சமயத்தில், நாம் அமெரிக்கர்கள் அல்ல” என்று கூறினேன். மேலும் நான், “நான் உன்னதத்திலிருந்து பிறந்திருக்கிறோம். பரிசுத்த ஆவியானது கீழே இறங்கி வந்தது, நாம் ஒரு ராஜ்ஜயத்தை சார்ந்தவர்களாயிருக்கிறோம். அது இந்த உலகத்திற்குரியதல்ல” என்றேன். நான் தொடர்ந்து, “அந்தக் காரணத்தினால் தான் நம்முடைய சகோதரிகள் ஒழுங்கான முழுமையான ஆடைகளை அணிந்து, நீளமான தலை முடியினை உடையவர்களாயிருந்து முக ஒப்பனை அலங்காரங்களைச் செய்கிறதில்லை. புரிகிறதா? அவர்களுடைய விசேஷ குணங்கள் அவர்கள் 'கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்கள்' என்றும், உன்னதத்திலிருந்து வந்தவர்கள் என்பதையும் அடையாளங்காட்டுகின்றன.” 11ஆகையால் நாம் ஒரு ராஜ்ஜியத்தை நாடிச் சென்று கொண்டிருக்கிறோம். தம்முடைய ராஜ்ஜியத்திற்கு தம்முடைய பிரஜைகளை ஏற்றுக் கொள்ள வரப்போகும் ஒரு ராஜாவையே நாம் நாடிச் சென்று கொண்டிருக்கிறோம். அவர்களுடைய அவர்களுடைய விசேஷ குணங்களினால் அவர்கள் அடையாளங்கண்டு கொள்ளப்படுகின்றனர், அதாவது அவர்களுடைய பொக்கிஷங்கள் இந்தப் பூமிக்குரியதோ அல்லது இந்த தேசத்திற்குரியதோ அல்ல. அது மகிமையில் உன்னதத்திற்குரியதாயுள்ளது. ஆகையால், அவர்கள், “தேவன் தாமே கட்டி உண்டாக்கின ஒரு நகரத்துக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்” என்றேன். அவர்கள் சரியாக ஏற்றபடி அடையாளங்கண்டு கொள்ளப்படுகின்றனர். எதாவது ஒரு இரவு உங்களுக்கு அதைக் குறித்துப் பிரசங்கிக்க போதிய குரல் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும். ஆனால் நான் இப்பொழுது பேசும் இக்காரியத்தை விட்டுவிடுகிறேன். இப்பொழுது அதனுடைய விசேஷ குணங்களினால் அடையாளங்கண்டு கொள்ளப்படுதல். 12நாம் இங்கே இஸ்ரவேலரின் காலத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் வந்த ஒரு நல்ல மாதிரியைக் கண்டறிகிறோம். தேவன் அவருடைய வாக்குத்தத்தின்படியே அவர்களை அழைத்திருந்தார். அவர் ஆபிரகாமிடத்தில், “அவனுடைய சந்ததியார் இந்த அந்நிய தேசத்தில் நானூறு வருடங்களாக இருப்பார்கள் என்றும், அதன்பின்னர் அவர் ஒரு மகத்தான வல்லமையுள்ள கரத்தினால் அவர்களை விடுவிப்பேன். அப்பொழுது அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பாலும் தேனும் ஓடிக்கொண்டிருக்கிற ஒரு தேசத்திற்கு செல்லுவார்கள்” என்றும் கூறினார். அதன்பின்னர் வாக்குத்தத்தின் நேரம் நெருங்கினபோது, அவர்களுக்கு மத்தியில் மகத்தான ஊழியத்தை உடையவனாயிருந்த யோசேப்பை அறியாத ஒரு-ஒரு பார்வோன் தோன்றினான். தேவன் மோசே என்று பெயரிப்பட்டிருந்த ஒரு தீர்க்கதரிசியை எழுப்பினார். அந்த மனிதன் எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டிருந்தான். அவன் ஒரு மகத்தான, புத்தி சாதுர்யமான, அறிவாற்றலுள்ள மனிதனாயிருந்தான் என்பதில் சந்தேகமேயில்லை, ஏனென்றால் அவனால் எகிப்தியர்களுக்கு சகல சாஸ்திரங்களையும் கற்பிக்க முடிந்தது. அவன் விடுதலைக்கான சரியான முறைப்படியான பொருத்த பொருத்தமான மனிதனைப்போல் காணப்பட்டான். ஆனால் நீங்கள் பாருங்கள், நாம் விடுதலை என்று அழைப்பதற்கும், தேவன் விடுதலையென்று அழைப்பதற்கு சில வித்தியாசம் உள்ளன. இப்பொழுது இந்த மனிதன் தன்னுடைய எல்லா நெறி முறைகளோடுமிருப்பதைக் கவனியுங்கள். இஸ்ரவேல் புத்திரரை விடுவிக்கவே அவன் பிறந்திருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். அதே சமயத்தில் தன்னுடைய எல்லா கல்வியறிவோடும், ஏறக்குறைய அவன் அறிந்திருந்த எல்லாவற்றோடும், அந்தப் பணியைச் செய்ய அவன் தேவனால் அழைக்கப்பட்டிருந்தான் என்பதை அறிந்திருந்தான். அவன் தனக்கு உண்டாயிருந்த எல்லாவற்றையும். அவன் தன்னுடைய இளங்களைப் பட்டத்தையும், தன்னுடைய தத்துவப் பட்டங்களையும் மற்று LL.D., போன்ற பட்டங்களையும் உடையவனாயிருந்தான். அவன் இஸ்ரவேலரை விடுவிக்க புறப்பட்டுச் சென்றபோது, ஒரு முழு தோல்வியை அடைந்தான். இப்பொழுது கவனியுங்கள், அவன் பார்வோனாகும்படி எகிப்தில் உள்ள சிங்காசனத்தின் மேல் தன் அதிகாரத்தை உடையவனாயிருந்தது போன்று காணப்பட்டது. அதாவது அவன் பார்வோனான பிறகு இஸ்ரவேல் புத்திரரை விடுவித்திருக்க முடியும், ஏனென்றால் அவன் வரிசைப்படி அடுத்தது சிங்காசனத்திற்கானவனாயிருந்தான். ஆனால், நீங்கள் பாருங்கள், அதாவது, அந்த விதமாக அதைச் செய்து தேவனுடைய பிள்ளைகளை விடுவிப்பதில் தேவனுடைய விசேஷ குணாதிசயம் அடையாளங்கண்டுகொள்ளப்படமாட்டாது. 13அவர் அவர்களை விடுவிப்பதாகக் கூறினார் அவர், “ஒரு வல்லமையுள்ள கரத்தினால் அவர்களை விடுவிக்க” மனதாயிருந்தாரேயன்றி, பலத்த சேனையைக் கொண்டு மோசேயினால் அல்ல, ஆனால் ஒரு வல்லமையுள்ள கரத்தினால் விடுக்கவிருந்தார். இந்த தீர்க்கதரிசியோ ஓடிப்போய் வனாந்திரத்தில் நாற்பது வருடங்களாக இருந்தான் என்று நாம் கண்டறிகிறோம். அவனுக்கு முறையான கல்வி பயிற்சியளிக்க பார்வோனுக்கு நாற்பது வருடங்கள் தேவைப்பட்டது, அவனிடத்திலிருந்து அதை எடுத்துப்போட தேவனுக்கு நாற்பது வருடங்கள் தேவைப்பட்டது. ஆகையால் ஒரு நாள் அவன் வனாந்திரத்தின் பின்புறத்தில் ஒரு எரிகிற முட்செடியில் தேவனாகிய கர்த்தரை ஒரு முட்செடியில் இருந்த ஒரு அக்கினி ஸ்தம்ப ரூபத்தில் சந்தித்தான். அவன் தன்னுடைய பாதரட்சைகளை கழற்றிப் போட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டான், ஏனென்றால் அவன் நின்றுகொண்டிருந்த இடம் பரிசுத்த பூமியாயிருந்தது. இப்பொழுது இந்த அருமையான, பண்பட்ட, படித்த மனிதனாயிருந்து வந்த அவனைப் பாருங்கள், மேலும் அவன் தேவனை சந்தித்தப் பிறகு அவனுடைய விசேஷ குணங்களின் மாற்றத்தை கவனியுங்கள். அவன் பெரும்பாலும் செய்திருந்த... சில சமயங்களில் தேவன் ஒரு எளிமையான விதத்தில், மாம்சப்பிரகாரமான் வழியின் சிந்தனைக்கு அப்பேர்ப்பட்ட ஒரு முட்டாள்தனமான வழியில் காரியங்களைச் செய்கிறார். முழு தோல்வியடைந்திருந்த ஒரு மனிதனைக் கவனியுங்கள்; முழு எகிப்திய சேனையோடும், தேவனுடைய சித்தத்தை செய்யும்படி அவனைச் சுற்றியிருந்த ஒவ்வொரு காரியத்தோடும், அவனுடைய எல்லா கல்வியறிவோடும் நாற்பது வயதிலே தன்னுடைய முதன்மை ஸ்தானத்தில் இருந்தான். இதோ அவன் எண்பது வயதான அடுத்த நாள் காலையில் தன்னுடைய மனைவி அவளுடைய இடுப்பில் தன்னுடைய பிள்ளைகளை வைத்துக் கொண்டு, ஒரு கோவேறு கழுதையின் மேல் தன்னுடைய கால்களை இருபக்கமும் போட்டு அமர்ந்து கொண்டிருக்க, அவன் எகிப்தைக் கைப்பற்ற தன்னுடைய கையில் ஒரு கோலோடு சென்று கொண்டிருக்கிறான். நீங்களோ ஒரு கேலிக்கிடமான காட்சியைக் குறித்துப் பேசுகிறீர்களே! ஆனால் அது தேவனுடைய விசேஷ குணங்களையே காண்பித்துக் கொண்டிருந்தது, ஏனென்றால் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கும் ஒரு மனிதனை அவர் உடையவராயிருந்தார். அவ்வளவுதான். அதைக் குறித்த காரியமென்னவெனில், எகிப்திலே ஒரு சேனையே தோல்வி கண்டிருக்க, அங்கு ஒரு மனிதன் படையெடுக்கச் செல்வதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஆனால் அது என்னவாயிருந்தது? அவனுடைய விசேஷ குணாதிசயம், அவனுடைய தந்திரோபாயங்கள் மாற்றப்பட்டிருந்தன. அவன், “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” என்னும் கர்த்தருடைய நாமத்தில் போய்க்கொண்டிருந்தான். அதைக் குறித்த காரியம் என்னவாயிருந்ததென்றால், அவன் கைப்பற்றிவிட்டான். அவன் கைப்பற்றினான், ஏனென்றால் அவன் கர்த்தருடைய வல்லமையில் போய்க்கொண்டிருந்தான். 14தன்னுடைய பாதையில் இஸ்ரவேலரை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழி நடத்திச் செல்கையில், அவன் தன்னுடைய சகோதரனோடு, தன்னுடைய ஸ்தாபன சகோதரனான மோவாப்போடு தொடர்பு கொள்ள வந்தான். இப்பொழுது மோவாப் எந்த விதத்திலும் அங்கே அஞ்ஞானிகளாயில்லாமலிருந்தனர். அவர்கள் லோத்தினுடைய குமாரத்திகளினுடைய பிள்ளைகளாயிருந்தனர். அவர்களுடைய பிள்ளைகளில் ஒருவனானாயிருந்த மோவாப் அங்கு உருவாகியிருந்தான். இப்பொழுது அங்கே இந்த இரண்டு தேசங்களிலும் வேறுபாடு உள்ளதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இங்கே எகிப்திலிருந்து புறப்பட்டிருந்த கூட்டம் கிட்டத்தட்ட சிதறிடிக்கப்பட்டு போக, எந்த தேசமுமில்லாமல், எந்த நிர்வாகிகளுமில்லாமல் அல்லது எந்த ராஜாவுமில்லாமல் அல்லது வேறெந்த காரியமுமில்லாமல் அல்லது அவர்களுக்கு மத்தியில் எந்த பிரமுகர்களும் இல்லாமல் அப்படியே ஒரு கூட்ட ஜனம் தங்களுடைய பாதையில் ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த தேசத்திற்கு சென்று கொண்டிருந்தது. இங்கோ அவர்கள் மோவாப் தேசத்தினூடாக செல்ல வேண்டியதாயிருந்தது. அது சரியாக வாக்குத்தத்தின் பாதையில் இருந்தது. மோவாபும் கூட யேகோவாவில் விசுவாசிகளாயிருந்தனர். அவர்கள் ஒரு தீர்க்கதரிசியை உடையவர்களாயிருந்தனர். இஸ்ரவேலரும் ஒரு தீர்க்கதரிசியை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் இருவருமே தீர்க்கதரிசிகளை உடையவர்களாயிருந்தனர். இப்பொழுது கவனியுங்கள், மற்ற தேசத்திலிருந்து சபிக்கும்படி வந்து கொண்டிருந்த அந்த ஸ்தாபனமாக்கப்பட்ட தேசத்தின் தீர்க்கதரிசியின் இடத்திற்கு இஸ்ரவேலர் வரவேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அது ஒரு அலைந்து திரியும் கூட்டமாய், தங்கும்படியான குறிப்பிட்ட ஸ்தலம் இல்லாததாயிருந்தது. ஆகையால் அவர்கள் வந்தனர். அந்த இரண்டு தீர்க்கதரிசிகளையும் கவனித்தனர். அது அடிப்படையாக பேசும்படி வரும்போது, அவை இரண்டுமே சரியாயிருந்தன. காரணம், கவனியுங்கள், பிலேயாம், அந்தப் பேராயர் அவர்களிடத்தில், “இப்பொழுது நீங்கள் எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டுங்கள்” என்று கூறியிருந்தான். ஏழு என்ற எண் தேவனுடைய பரிபூரணமாய், ஏழு சபைக் காலங்களையும், சிருஷ்டிப்பின் ஏழு நாட்கள் போன்றவற்றைக் குறிப்பதாயும் உள்ளது. இப்பொழுது கவனியுங்கள், ஏழு, தேவன் எழில் பரிபூரணப்படுகிறார். 15“ஏழு பலிபீடங்கள், ஒவ்வொரு பலிபீடத்தின் மேலும் ஒருஒரு காளையை வைத்தான்.” இப்பொழுது அதேவிதமான பலிபீடத்தையே இஸ்ரவேலரும் தங்களுடைய பாளையத்தில் உடையவர்களாயிருந்தனர். அவர்கள் இஸ்ரவேலரிடத்தில் காணப்பட்ட அதே மாதிரியான பலிபீடத்தோடு இங்கு இருந்தனர். அதே பலி, ஒரு காளை மற்றும் ஒரு காளை; ஒரு தீர்க்கதரிசி மற்றும் ஒரு தீர்க்கதரிசி. இரண்டு தேசங்களிலும் வேறுபாடு இருந்தன. நாம் ஒரு மிகப் பரிபூரண மாதிரியின் நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அதற்குள்ளாக செல்ல நேரமிருந்தால் நலமாயிருக்குமே! நாம் ஒத்த சம்பவங்களை கண்டறிய வேண்டும் என்று தேவன் இதை உவமையில் செய்கிறார். இப்பொழுது பிலேயாமும் கூட ஒவ்வொரு பலிபீடத்தின் மேலும் ஒரு செம்மறி ஆட்டுக்கடாவை வைக்கும்படி கேட்டிருந்தான். அது மேசியாவின் வருகையில் உள்ள அவனுடைய விசுவாசத்தைக் குறித்து பேசுகிறதாயிருந்தது. ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு ஆண் செம்மறி ஆடு, அவர்கள் அதேப் பலியை இஸ்ரவேலில் உடையவர்களாயிருந்தனர்; கீழே இஸ்ரவேலின் முகாம் இருந்தது, இங்கே மேலே மோவாப் இருந்தனர். அடிப்படையில் அவர்கள் இருவரும் சரியாயிருந்தனர், ஆனால், அடிப்படை உபதேசத்தில் சரியாயிருந்தனர் என்பதை கவனியுங்கள். ஆனால் இஸ்ரவேலருடைய பாளையத்தில் இருந்த ஒரு தீர்க்கதரிசியோ தேவனுடைய விசேஷ குணங்களை உடையவனாயிருந்தான். அவன் தேவனுடைய வார்த்தையோடு, அந்தக் காலத்திற்கான தேவனுடைய வாக்குத்தத்தத்தோடு தரித்திருந்தான், ஏனென்றால் அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லும் ஒரு பாதையில் இருந்தான். புரிகிறதா? இப்பொழுது, அடிப்படையான பாகத்தைப் பொருத்தமட்டில் பிலேயாமும், பாலாக்கும் மோசேயிருந்ததைப் போல அடையாளமாயிருக்க முடிந்தது. 16ஆனால், நீங்கள் பாருங்கள், மோசே சரியான தேவனுடைய தீர்க்கதரிசியாயிருந்து, அடிப்படையான பாகங்களை மாத்திரம் உடையவனாயிராமல், தேவனுடைய அடையாளத்தையும் உடையனாயிருந்தான். பாருங்கள், அவன் அந்த காலத்திற்காக சரியாக வாக்களிக்கப்பட்டிருந்த கடமையின் பாதையில் இருந்தான்; நோவாவின் காலத்திற்கானதில் அல்லாமல், அப்பொழுதிருந்த காலத்திற்கான வாக்குத்தத்தமான, “பாலும் தேனும் ஓடிக்கொண்டிருக்கிற ஒரு தேசத்திற்கு நான் உங்களைக் கொண்டு செல்வேன்” என்பதை உடையவனாயிருந்தான். அவர்கள் தங்களுடைய வழியில் இருந்தனர், இஸ்ரவேலர் தங்களுடைய தீர்க்கதரிசியோடு, மோசேயோடு, அந்தக் காலத்தின் செய்தியோடு அடையாளங்கண்டு கொள்ளப்பட்டனர். தேவன் மோசேவுக்குள் விசேஷ குணங்களில் அடையாளங்கண்டு கொள்ளப்பட்டார். ஒரு அக்கினி ஸ்தம்பம் அவனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தது. அவனும் கூட பாவ நிவிர்த்தியை கிரியையில் உடையவனாயிருந்தான்; அதைக் குறித்துப் பேசாமல், அதை கிரியையில் உடையவனாயிருந்தான். எதிர்காலத்தில் என்னவாயிருக்கும் என்றில்லாமல், இப்பொழுது என்னவென்பதை உடையவனாயிருந்தானே! கவனியுங்கள், அவன் ஜனங்களின் சுகவீனத்திற்கும், வியாதிக்குமாக உயர்த்தப்பட்டிருந்த ஒரு வெண்கல சர்ப்பத்தை உடையவனாயிருந்தான், ஆகையால் மோசே தெய்வீக சுகமளித்தலை பயிற்ச்சித்துக் கொண்டிருந்தான். அவன் பாவ நிவிர்த்தியை உடையவனாயிருந்தான், வெண்கல சர்ப்பம் தேவன் பாளையத்தில் இருந்ததை அடையாளப்படுத்த, ஜனங்களோ அந்த வெண்கல சர்ப்பத்தை நோக்கிப் பார்த்து சுகமடைந்து கொண்டிருந்தனர். அவனை பின் தொடர்ந்து கொண்டிருந்த ஒரு அடிக்கப்பட்ட கன்மலையையும் கூட அவன் உடையவனாயிருந்தான். அவர்கள் அழிந்து போகாமல் நித்திய ஜீவனை உடையவர்களாயிருந்தனர் என்றும், சந்தோஷத்தையும், இரட்சிப்பையும் கொண்டிருக்க அவர்களுக்கு மத்தியில் ஜீவத்தண்ணீரை தொடர்ந்து வைத்திருக்கும்படியான தேவனையே அது அடையாளப்படுத்திக் கொண்டிருந்தது. அது ஒரு மாதிரியாய் இருந்தது. வனாந்திரத்தில் இருந்த அந்த அடிக்கப்பட்ட கன்மலையானது அடிக்கப்பட்ட கிறிஸ்துவிற்கு ஒரு மாதிரியாயிருந்தது. அதன்பின்னர் அவர்கள் வாக்குத்தத்ததின் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தனர். அதுவே தேவனுடைய விசேஷ குணாதிசயத்தைக் காண்பிக்கும்படியான மற்றொரு அடையாளமாயிருந்தது. இந்த மோவாப்பியர் அடிப்படையில் எவ்வளவுதான் வார்த்தையோடிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை; மோசே அடிப்படைக் காரியத்தோடு கூட அடையாளத்தையும், அவர்களுக்கு மத்தியிலே தேவனுடைய விசேஷ குணாதிசயத்தையும் உடையவனாயிருந்தான். தேவன் தம்மையே அடையாளங்காண்பித்தார். இரண்டு தீர்க்கதரிசிகள், அவர்கள் இருவருமே தீர்க்கதரிசிகள், அவர்கள் இருவருமே அடிப்படைவாதிகளாயிருந்தனர்; ஆனால் தேவன் மோசேயில் தம்முடைய விசேஷ குணங்களை அடையாளங் காண்பித்தார், ஏனென்றால் அவன் தேவனுடைய விசேஷ குணங்களை அவரோடு உடையவனாயிருந்தான். 17இப்பொழுது மீண்டும், தேவனுடைய விசேஷ குணங்கள் எப்பொழுதுமே இயற்கைக்கு மேம்பட்டவைகளாயுள்ளன, ஏனென்றால் அவர் இயற்கைக்கு மேம்பட்டவராயிருக்கிறார். தேவன் இயற்கைக்கு மேம்பட்டவராயிருக்கிறார். அது எப்பொழுதுமே நவீன நாளின் போக்கின் சிந்தனைக்கு, வழக்கத்திற்கு மாறானதாகவேயுள்ளது. நீங்கள் அதை அறிவீர்கள். தேவன் எப்பொழுதுமே ஒவ்வொரு காலத்திலும் கடந்து சென்றுள்ள மத சம்மந்தான குழுக்களுக்கான முறைமையை நிலைகுலையச் செய்துள்ளார். ஒரு நபரோ அல்லது ஒரு ஜனக் குழுவினரோ ஒரு செய்தியின் பேரில் தங்களை ஒன்று சேர்த்து ஸ்தாபனமாக்கிக் கொண்டு, பின்னர் அவர்கள் மரித்து, செயலற்றுபோனபிறகு, மீண்டும் ஒரு முறை கூட உயிரடைந்ததில்லை. எந்த சரித்திரத்திலுமே இல்லை. லூத்தரன்கள், பிரஸ்பிடேரியங்கள், மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தேகோஸ்துகள் போன்றவர்கள் அதை ஸ்தாபன குழுக்களாக்கிக் கொள்ளப் போகும்போது அவர்கள் ஒருபோதும் மீண்டும் எழும்பினதேயில்லை. தேவன் தனிப்பட்ட நபர்களோடு ஈடுபடுகிறார். கவனியுங்கள், அவர் நினைத்துப் பார்க்கும் விதத்திற்கு மிகவும் வழக்கத்திற்கு மாறானவராயிருக்கிறார். பாருங்கள், நாம் ஒரு செல்லும் திசையிலிருந்து விலகிச் செல்லுகிறோம். நாம் அதை இந்தவிதமாக விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது தேவன் வாக்குப்பண்ணியிருக்கிற தம்முடைய வார்த்தையோடு வந்து அவர் தம்மை அந்த வார்த்தையில் அடையாளங்காட்டுகிறார். இந்தக் குழு அதற்குச் செல்ல முடியாது, ஏனென்றால் அது அதில் விசுவாசங்கொள்கிறதில்லை. பாருங்கள், அது அதிலிருந்து அதனை துண்டித்துக் கொண்டது. 18யோசேப்பைப் போல, அவன் ஒரு தாவீதின் குமாரனாயிருந்தான், ஒரு நல்ல மனிதனாயிருந்தான், மரியாளின் கணவனாகிய யோசேப்பு. அவன் ஒரு நல்ல மனிதனாயிருந்து, வேதாகமத்தை, தொடர்ந்து வேத தோல் சுருள்களை வாசித்துக் கொண்டிருந்தான் என்பதில் சந்தேகமில்லை, ஏனென்றால்...மேசியா வருவதற்காக எதிர் நோக்கிக் கொண்டிருந்தான், வேதம் என்ன சம்பவிப்பதாக கூறியிருந்ததோ அதை அவன் அறிந்திருந்திருக்க வேண்டும். ஏசாயா, “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்றான். இப்பொழுது, அவன் மரியாள் என்ற இந்த வாலிபப் பெண்ணோடு சென்று கொண்டிருந்தான், அநேகமாக அவளுக்கு பதினெட்டு வயதிருக்கலாம், யோசேப்பு அநேகமாக சற்று வயதில் மூத்தவனாய் இருந்திருப்பான். அதன்பின்னர் அவர்கள் விவாகம் செய்வதற்கென நிச்சயிக்கப்பட்டிருந்தனர், அப்பொழுது அவள் தாயாயிருப்பதைத் தெரிவிக்கிறாள். இப்பொழுது அதனை ஏற்றுக்கொள்வதோ யோசேப்பிற்கு ஒருவிதமாக கடினமானதாயிருந்தது. காபிரியேலின் சந்திப்பை மரியாள் அவனிடத்தில் கூறினாள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவனுடைய குணாதிசயமோ அந்த விதமாக அவனை வழி நடத்திக் கொண்டிருந்தபடியால், அவன் அதை சந்தேகித்தான் என்பதை நாம் கவனிக்கிறோம். இப்பொழுது அவர்கள் விவாகம் செய்வதற்கு முன்னர் அவள் கர்ப்பவதியாக காணப்பட்டாள். வேதத்திலோ அதற்குரிய தண்டனை மரணமாய், கல்லெறிந்து கொல்லப்படுவதாயிருக்கிறது. ஒரு விவாகமாகாத ஸ்திரீ கர்ப்பவதியாயிருந்தால், அவள் கல்லெறியப்பட வேண்டியவளாயிருந்தாள். இஸ்ரவேலிலே விபச்சாரமே இல்லாதிருந்தது. அது நீக்கப்பட்டிருந்தது. எனவே நாம் உபாகமத்தில் அதைக் கண்டறிகிறோம், அதுவே அதைச் சொல்லுகிறது. 19இப்பொழுது, மரியாள் தான் செய்திருந்த செயலுக்கு ஒரு கேடகமாகவே யோசேப்பைப் பயன்படுத்த முயற்ச்சித்துக் கொண்டிருந்ததைப் போல காணப்பட்டாள் என்று நாம் கண்டறிகிறோம். காரணம் அவர்கள் மணம்புரியும் முன்னே அவள் கர்ப்பவதியாய்க் காணப்பட்டாளானால், அப்பொழுது அவள் கல்லெறிப்பட வேண்டும். எனவே அவளுக்காக ஒரு கேடயமாக நிற்கக்கூடிய யாரோ ஒருவர் இப்பொழுது அவளுக்கு வேண்டியதாயிருந்தது. அவள் முழுமையாகவே அந்தவிதமாகத்தான் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள் என்பதைப் போன்றே அது காணப்பட்டது. ஆனால் யோசேப்பு அவளுடைய பெரிதான அழகான கண்களுக்குள் நோக்கிப் பார்க்க, அவளோ, “யோசேப்பே, காபிரியேல் என்னிடத்தில், 'பரிசுத்த ஆவி உன்மேல் நிழலிடும்உன்னிடத்தில்-உன்னிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டாகும். அது தேவனாயுள்ளது. அவர்தான் தான் ”தேவனுடைய குமாரன்“ என்று அழைக்கப்படப் போகிறார்” என்று கூறினான் என்று கூறியிருப்பாள். யோசேப்பு, அவன்-அவன்அவன் அதை விசுவாசிக்க விரும்பினான், ஆனால் அது மிகவும் வழக்கத்திற்கு மாறாததாயிருந்தது. அது இதற்கு முன்பு ஒருபோதும் சம்பவித்திராததாயிருந்தது. அது அந்தவிதமாகத்தான் இன்றைக்கும் உள்ளது. நாம் மாத்திரம். அதாவது எந்தக் காரியத்தின் அசாதாரணத்தையும் நான் ஏதோ ஒரு வழியில் ஜனங்கள் காணும்படி புரிந்து கொள்ளச் செய்தால் நலமாயிருக்கும், அது வார்த்தையினால் அடையாளங் கண்டு கொள்ளப்படுமானால், அப்பொழுது அதனுடைய விசேஷ குணங்கள் அது என்னவென்பதை நிரூபிக்கின்றன். அது தேவன் செய்கையில் இருப்பதாகும். 20யோசேப்பு இதை அறிந்திருந்திருக்க வேண்டும். அவள், “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்பதை அறிந்திருந்திருக்க வேண்டும். ஆனால் அவன் அதைக் குறித்து உத்தமமாயிருந்தான். அவன் அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் தள்ளிவிட மனதாயிருந்தான், ஆனால் அவன் அவன் அதைச் செய்வதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவனுக்கு ஒரு சொப்பனத்தில் காணப்பட்டார். அவர் ஏன் ஒரு சொப்பனத்தில் காணப்பட்டார் என்று நீங்கள் எப்போதாவது வியப்புற்றதுண்டா? அந்த நாட்களில் தீர்க்கதரிசிகள் இல்லாதிருந்தனர். அவர்களுடைய சொப்பனம் மிகவும் எளிமையாயிருந்தது, அதற்கு எந்த வியாக்கியானமும் தேவைப்படவில்லை. அப்பொழுது, “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது” என்று கூறினார். பாருங்கள், அப்பொழுது, அதுவே அதைச் தீர்த்துவைத்தது. பாருங்கள், அவர் இரண்டாந்தரமான நிலையான ஒரு சொப்பனத்தில் அவனிடத்திற்கு வந்தார். ஆனால், நீங்கள் பாருங்கள், அதாவது, “இது கன்னிகை கர்ப்பவதியாவாள் என்பதாயுள்ளது” என்று அந்த வார்த்தையை அடையாளங்காட்ட அங்கே எந்த தீர்க்கதரிசியாயும் இல்லாதிருந்தனர். புரிகிறதா? ஆகையால், அவர் ஒரு சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டார், ஏனென்றால் அவன் உத்தமனும், நீதிமானும், ஒரு நல்ல மனிதனுமாயிருந்தான். எந்த நல்ல மனிதனும் அந்தக்காலத்திற்கென தேவனால் அழைக்கப்பட்டிருந்தால் அப்பொழுது ஏதோ ஒரு வழியில் அந்த மனிதனுக்கு அந்த காலத்திற்கான அவருடைய செய்கைகளை அடையாளங்காட்ட தேவன் வருவார் என்று நான் விசுவாசிக்கிறேன். 21இப்பொழுது, ஆனால் அது மிகவும் வழக்கத்திற்கு மாறானதாயிருந்தது, அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் எப்பொழுதுமே இந்த எல்லா வழக்கத்திற்கு மாறானவைகளும் அந்த காலத்திற்கான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின்படி தோன்றுகின்றன. இப்பொழுது, சில ஜனங்கள் போய், “இது வழக்கத்திற்கு மாறானது, அது தேவனாயுள்ளது. இது வழக்கத்திற்கு மாறானதாயுள்ளது” என்று கூறலாம். ஆனால் நீங்கள் பாருங்கள், அது வார்த்தையினால் அடையாளங்கண்டு கொள்ளப்பட வேண்டும், வார்த்தை தேவனாய் உள்ளது. புரிகிறதா? அதன்பின்னர் இந்த அடையாளத்தின் விசேஷ குணாதிசயம் அது யாராய் உள்ளது என்று அடையாளங் காட்டுகிறது, ஏனென்றால் தேவன், “இது சம்பவிக்கும்” என்று கூறியுள்ளபடியால், அது சம்பவிக்கிறது. புரிகிறதா? அதனுடைய விசேஷ குணம் என்னவெனில் தேவனுடைய வார்த்தையானது என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதின் விசேஷ குணத்தின் மூலம் அடையாளங் கண்டு கொள்ளப்படுதலாயுள்ளது. அவர் இந்த கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியை ஊற்றுவதாகக் கூறினார். அவர் அதைச் செய்தார். அதனுடைய விசேஷ குணங்கள் அது தேவனாயிருந்தது என்றும், அவருடைய வார்த்தை வாக்களித்தது என்றும் அடையாளங்காட்டின. பாருங்கள், அது எப்பொழுதுமே அதனை அடையாளங்காட்டுகிறது. இப்பொழுது, எப்பொழுதுமே வார்த்தை ஒரு காரியத்தை தவறு என்று கூறும் போது, ஒவ்வொரு முறையும் தேவனுடைய வார்த்தை அந்த தவறான வார்த்தையைத் திருத்துகிறது. நீங்கள் எப்போதாவது கவனித்தீர்களா? அது நோவாவின் காலத்தில் தேவன் வானத்திலிருந்து தண்ணீரைக் கொண்டுவரப் போவதாயிருந்தார் என்று அந்த விஞ்ஞான காலத்தை திருத்தினது. அது மோசேயாயிருந்தது, பாருங்கள், அவர்கள் யாவரும் எகிப்தில் குடியேறியிருந்தபோது அது திருத்தினது, ஆனால் தேவனுடைய வார்த்தை அடையாளங்கண்டு கொள்ளப்பட வர வேண்டியதாயிருந்தது. சத்திய வார்த்தையே பிழையைத் திருத்துகிறது. 22நான் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கட்டும். நாம் இங்கு சற்று ஆழமாகச் செல்லலாம். நான் கற்பிக்கப்பட்ட செய்தியையோ அல்லது கோட்பாட்டையோ பிரசங்கிக்க வேண்டியதில்லை, ஆனால் நான் உங்களை ஒரு காரியம் கேட்கட்டும். இயேசு வார்த்தையாயிருந்தார். நாம் அதை அறிவோம். வேதம் அதைக் கூறினது. பரிசுத்த யோவான் 1-ம் அதிகாரம், “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்” என்று உரைத்துள்ளது. அவர் இன்னமும் வார்த்தையாயிருக்கிறார். அதன்பின்னர் அவரால் அவர்களுடைய சிந்தனைகளை அறிந்துகொள்ள முடிந்தபோது, அது வார்த்தையாயிருந்தது என்பதை அவர்கள் அறிந்துகொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் அதைத்தான் அவர் செய்வார் என்று தேவனுடைய வார்த்தை கூறியிருந்தது. அவர் தீர்க்கதரிசியாயிருந்தார். 23இப்பொழுது கவனியுங்கள், அவர் பிறந்திருந்தபோது, கிட்டத்தட்ட பன்னிரண்டு வயதாயிருந்தபோது, அவர் கூடாரப் பண்டிகைக்குச் சென்றார். அவர்கள் அங்கே பஸ்காவுக்குச் சென்றிருந்தனர். அவர்கள் மூன்று நாள் பிரயாணமாகச் சென்றிருந்தனர். அப்பொழுது அவர்கள் திரும்பி வரும் வழியில், அவர் தங்களுடைய ஜனங்களுக்குள்ளே இருப்பார் என்று எண்ணினர், சரியாகக் கூறினால், அவ்வாறு யூகித்துக்கொண்டனர். நாம் அதிலிருந்து ஒரு பாடத்தை புரிந்துகொள்ள கூடும். அதுவே இன்றைக்கு மிக அதிகமாக உள்ளது. இப்பொழுது நீங்கள் மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன், கத்தோலிக்கர், நீங்கள் எதுவாகயிருந்தாலும், பாருங்கள், நீங்களும் அதேக் காரியத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். வெஸ்லி ஒரு பெரிய எழுப்புதலை உடையவராயிருந்தார் என்றும், லூத்தர் ஒரு பெரிய எழுப்புதலை உடையவராயிருந்தார் என்றும், அல்லது பெந்தேகோஸ்தே ஒரு பெரிய எழுப்புதலை உடையவராயிருந்தார் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். அவர் ஜனங்களுக்கு மத்தியில் இருக்கிறார் என்று நீங்கள் மனதால் நினைக்கும்போது, சில சமயங்களில் அவர் அங்கே இருப்பதில்லை. அவர்கள் அவரைக் கண்டுபிடிக்கச் சென்றனர். அவர்கள் அவரை எங்கே கண்டுபிடித்தனர்? அவர்கள் அவரை எங்கே விட்டிருந்தனர். எருசலேமிலே. அவர்கள் அவரைக் கண்டுபிடித்தபோது, அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? ஒரு சிறு பையனாய், பன்னிரண்டு வயது பையனாய் இருந்தார், அநேகமாக அவருடைய தாய் அவருக்கு கற்பித்திருந்ததைக் காட்டிலும் வெறெந்தப் பள்ளிக்கும் அவர் ஒருபோதும் சென்றதேயில்லை. இங்கோ அவர் ஆலயத்தில் இருந்து அந்த ஆசாரியர்களோடு தேவனுடைய வார்த்தையைக் குறித்து தர்க்கித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர்கள் இந்தப்பிள்ளையின் ஞானத்தைக் குறித்து ஆச்சரியமடைந்தனர். ஏன்? அவர் வார்த்தையாயிருந்தார். இப்பொழுது கவனியுங்கள். 24இப்பொழுது மரியாளை தேவனுடைய தாய் என்று அழைக்கிற கத்தோலிக்க ஜனங்களாகிய உங்களை அவமரியாதை செய்வதற்காக அல்ல, ஆனால் நான் இங்கே உங்களுக்கு ஒரு சிறு பிழையைக் காண்பிக்கட்டும். சபையானது மரியாளின் மேல் கட்டப்பட்டிருந்தால், என்ன சம்பவித்திருக்கும் என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது அவள் வந்து, “ஓ, உன்னுடைய தகப்பனும் நானும் உன்னைக் கண்ணீரோடு தேடினோம்” என்று கூறினான். அந்தக் கூற்றைக் கவனியுங்கள், அவள் அப்பொழுது தன்னுடைய சொந்த சாட்சிக்கு எதிராகத் தீர்ப்பளிக்கச் செய்துவிட்டாள். அவள், “உன்னுடைய தகப்பனும் நானும் உன்னைக் கண்ணீரோடு தேடினோம்” என்றாள். அந்த வார்த்தைக் கவனியுங்கள். அவர் வார்த்தையாயிருந்தார். அவர், “என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று நீங்கள் அறியீர்களா?” என்றார். வார்த்தை பிழையை திருத்துகிறதைக் கவனியுங்கள். அங்கே அந்த ஆசாரியர்களுக்கு முன்பாக அவள் தன்னுடைய சாட்சியைப் பாழாக்கினாள். அவள் பரிசுத்த ஆவியினால் கர்பந்தரித்தாள் என்று கூறினாள். இங்கோ அவள் யோசேப்பு அவருடைய “தகப்பன்” என்று கூறிவிட்டாள். அப்பொழுது அந்த வார்த்தை உடனே அதைப் பற்றிப் பிடித்ததைப் பார்த்தீர்களா? அவர் வார்த்தையாயிருந்தார். இப்பொழுது, பன்னிரெண்டு வயதுடைய ஒரு பையன் அதைச் செய்யமாட்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் வார்த்தையாயிருந்தார். அவர் அந்தக் காலத்தின் உரைக்கப்பட்ட வார்த்தையாயிருந்தார், ஆகையால் அடையாளங்கண்டு கொள்ளப்பட்ட தேவனுடைய விசேஷ குணம் கிறிஸ்துவுக்குள் இருந்தது. அவர் பிழைகளைத் திருத்தினார். அவர் கூறினார். அவர்கள், “ஏன்? நாங்கள் மோசேயினுடைய சீஷர்கள்” என்றனர். பார்த்தீர்களா? அப்பொழுது அவர், “நீங்கள் மோசேயினுடைய சீஷர்களாயிருந்தால், நீங்கள் என்னை அறிந்திருப்பீர்கள். அவன் என்னைக் குறித்து எழுதியிருக்கிறான். மோசே, 'உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழுப்பப்பண்ணுவார்” என்றான். நீங்கள் மோசேயை அறிந்திருந்தால், நீங்கள் என்னையும் அறிந்திருப்பீர்கள்“ என்றார். பாருங்கள், வார்த்தை எப்பொழுதுமே அந்த நாளின் பிழையைத் திருத்துகிறது. ஆனால் ஜனங்கள் அதை விசுவாசிக்க விரும்புகிறதில்லை . அவர்கள் அதேவிதமாக நிலைத்திருக்கின்றனர். 25ஆனால் இயேசு தன்னுடைய சொந்த தாயைத் திருத்தினார். அவருடைய தாய் தவறாயிருந்தாள், ஏனென்றால் அவளுக்குள் ஒரு குழந்தை பரிசுத்த ஆவியினால் உண்டானது என்று அவள் ஏற்கெனவே கூறியிருந்தாள். இங்கேயோ அவள் தன்னுடைய சாட்சியை திருப்பி, யோசேப்பு அவளுடைய, “தகப்பன்,” இயேசுவின் தகப்பனாயிருந்தார் என்று கூறிவிட்டாள். இப்பொழுது யோசேப்பு... அவர் யோசேப்பின் குமாரனாயிருந்திருந்தால், அவர் தன்னுடைய தகப்பனுடைய வேலையை உடையவராயிருந்தால், அவர் தச்சுக் கடையில் இருந்திருப்பார். ஆனால் அவர் தன்னுடைய பிதாவினுடைய வேலையாக, அங்கே தேவாலயத்திலிருந்து அந்த ஸ்தாபனங்களைக் கடிந்து கொண்டிருந்தார். புரிகிறதா? அவர் தம்முடைய பிதாவுக்கடுத்தவைகளில் இருந்தார், வெறுமென அப்பொழுது ஒரு பன்னிரெண்டு வயது சிறு பையனாயிருந்தார். “என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று நீங்கள் அறியீர்களா?” என்றார். இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டபோது நீங்கள் கவனித்தீர்களா? அவர் தம்முடைய சோதனையில் இருந்தபோது, அங்கே அவருடைய விசேஷ குணம் அவர் தேவனாயிருக்க வேண்டும் என்பதை அடையாளங்காட்டினது, ஏனென்றால் அவர் வார்த்தையோடு தரித்திருந்தார். புரிகிறதா? சாத்தான், “எழுதியிருக்கிறதே” என்றான். இயேசு, “இதுவும் கூட எழுதியிருக்கிறதே” என்று கூறி, வார்த்தையோடு தரித்திருந்தார். 26நாம், “தேவன் பூர்வ காலங்களில்” என்று இங்கே வாசிக்கிறோம். “தேவன் பூர்வகாலங்களில்” அதாவது பண்டைய காலங்களில், “பங்கு பங்காகவும் வகைவகையாகவும்,” பல வழிகளில், “தம்மை அவருடைய தீர்க்கதரிகளுக்கு தரிசனங்கள் மூலம் அடையாளங்காண்பித்தார்.” அதுவே ஒரு தீர்க்கதரிசியின் விசேஷ குணமாயிருந்தது, அவர் காரியங்களை முன்னறிவித்தபோது, அது சம்பவித்தது. இப்பொழுது அது அவருடைய அடையாளத்தின் அவருடைய விசேஷ குணாதிசயமாயிருந்தது, அதாவது தேவன் அவனோடு இருந்தார். அதன்பின்னர் அது அந்த நாளுக்கான வார்த்தையை வியாக்கியானிக்க உரிமைகளை அவனுக்கு அளிக்கிறது, ஏனென்றால்,“தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிகளிடத்திற்கு வருகிறது,” அதாவது அவன் முன்னறிவிப்பதே தீர்க்கதரிசியின் விசேஷ குணமாகும். வேதம், “ஓருவன் கூறினது நிறைவேறினால், அப்பொழுது நீங்கள் அவனுக்கு செவிகொடுங்கள்; ஆனால் அவன் கூறினது நிறைவேறவில்லையென்றால், அவனை நம்ப வேண்டாம், அவனுக்குப் பயப்பட வேண்டாம். ஆனால் என்னுடைய... என்னுடைய வார்த்தை அவனுக்குள் இல்லை. ஆனால் அது நிறைவேறினால், அப்பொழுது என்னுடைய வார்த்தை அவனுக்குள் இருக்கிறது,” என்று உரைத்துள்ளது. அதுவே அவனுடைய அடையாளம். அதுவே ஒரு தீர்க்கதரிசியின் விசேஷ குணமாயுள்ளது. இப்பொழுது, தேவன் பூர்வ காலங்களில் அந்தவிதமாகத் தான் அவர் தம்முடைய அடையாளத்தின் விசேஷ குணங்களின் மூலம் தம்மை மனிதனுக்கு காண்பித்தார், ஒரு தீர்க்கதரிசியாயிருக்கும்படி அழைக்கப்பட்ட ஒரு மனிதனூடாக பேசுவதன் மூலம் காண்பித்தார். இப்பொழுது வேதம், “தேவன் பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும், வகை வகையாகவும் தீர்க்கதரிசிகளின் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றினார்” என்று கூறுகிறது. 27நாம் பேதுருவின் இரண்டாம் நிரூபத்திலும் கூட, முழு தேவனுடைய வார்த்தையும் அவர்களால் எழுதப்பட்டிருந்தது என்றே வாசிக்கிறோம். “பண்டைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு வேதாகமத்தை எழுதினர்.” அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்தனர். வார்த்தை அவர்களிடத்திற்கு வந்தது, அவர்கள் அதை எழுதினர், ஆவியின் ஏவுதலினால் அதை எழுதி வைத்தனர். முதலாவது அவர்கள் அடையாளங்கண்டு கொள்ளப்பட்ட தீர்க்கதரிகளாயிருந்தனர்,அதன்பின்னரே அவர்கள் அவர்கள் ஆவியின் ஏவுதலினால் வார்த்தையை எழுதினர். அவர்கள் தெய்வீக வெளிப்பாட்டின் வியாக்கியானத்தை உடையவர்களாயிருந்தனர், ஏனென்றால் அது தேவன் மனிதனுக்குள்ளிருந்ததாயிருந்தது. இப்பொழுது அந்த விதமாகவே அவர் தம்முடைய அடையாளத்தின் விசேஷ குணங்களில் தம்மைக் காண்பித்தார். அவர்களுடைய தரிசனங்கள் ரூபகாரப்படுத்தப்பட்டிருந்தன, தேவனுடைய விசேஷ குணம் அவர்களுக்குள்ளிருந்து, ஜனங்களுக்கு அவரைத் தெரியப்படுத்துவதாயிருந்தது. இப்பொழுது அந்த ஒரேவிதமாகவே அவர் கிறிஸ்துவுக்குள் இருந்தார். ஒரு தீர்க்கதரிசி வெறுமென ஒரு சிறு புள்ளியாயிருந்தான். கிறிஸ்துவோ தேவனின் பரிபூரணமாயிருந்தார். தேவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்து, உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார். அவருடைய விசேஷ குணங்கள் அவரை, அவர் என்னவாயிருந்தார் என்பதை அடையாளங்காட்டின. அதினாலே அவர், “நான் என் பிதாவின் கிரியைகளை செய்யாதிருந்தால், அப்பொழுது என்னை விசுவாசிக்காதீர்கள். நான் என்னுடைய பிதாவின் விசேஷ குணத்தை உடையவனாயில்லையென்றால், அப்பொழுது நீங்கள் என்னை விசுவாசிக்காதீர்கள், என்னுடைய உரிமை கோரிக்கைகளையும் விசுவாசிக்காதீர்கள். நான் எனக்குள்ளாக என் பிதாவின் விசேஷ குணத்தை பெற்றிருக்கவில்லையென்றால், அப்பொழுது ஒருபோதும் என்னை விசுவாசிக்காதீர்கள்” என்றார். 28இப்பொழுது அவருடைய விசேஷ குணங்கள் ஒருபோதும் மாறுகிறதில்லை. ஒரு ஆட்டுக்குட்டி அதனுடைய சுபாவத்தை மாற்ற முடியாதது போல அல்லது வேறெந்த காரியமும் அதனுடைய குணங்களை மாற்ற முடியாதது போலவே தேவன் தம்முடைய விசேஷ குணத்தை மாற்றமுடியாது. காரணம், அது அதனுடைய மூல முதலானதாய் உள்ளவரைக்கும் அது மூலமுதலானதாகவே உள்ளது. நீங்கள் எந்தக் காரியத்தையாவது மாற்றினால், அப்பொழுது நீங்கள் அதை அதனுடைய மூல முதலானதிலிருந்து மாற்றிவிடுகின்றீர்கள். அது நீங்கள் ஒரு-ஒரு பன்றியை எடுத்து, அதைக் கழுவி, அதற்கு ஸ்திரீகள் செய்வதுபோல அதனுடைய நகங்களின்மேல் வண்ணந்தீட்டி, அதற்கு உதட்டுச் சாயமிட்டு, ஒரு அருமையான ஆடையை அதற்கு உடுத்தினாலும், அது அந்த பெண் பன்றியை அவிழ்த்துவிட்டால் அது நேராக சேற்றுக்குள் சென்று புரளும், மீண்டும் புரளும் என்பது போன்றேயாகும். ஏன்? அது ஒரு பன்றியாய் உள்ளது. அவ்வளவுதான். ஆனால், ஆனால், உங்களுக்குத் தெரியும், உங்களால் அதை மாற்ற முடியாது... ஒரு ஆட்டுக்குட்டி அதைச் செய்யாது. அது அந்த சேற்றுக்குள் கூட செல்லாது. அதற்கு அதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. அதுவே அதனுடைய விசேஷ குணங்களாகும். புரிகிறதா? நீங்கள் அதற்கு அதேவிதமான ஆடைகளை உடுத்தலாம், ஆனால் அது நிச்சயம் அவ்வாறு செய்யாது, அது நிச்சயம் அவ்வாறு செல்லாது. வெளிப்புறம் ஒரு காயத்தையும் செய்கிறதில்லை; அது உட்புறத்திலேயே உள்ளது. இப்பொழுது, தேவன் எல்லா ஜீவன்களுக்கும் தோற்றுவாயாயிருந்து வருகிறார்... 29இதைப் புரிந்து கொள்ளத் தவற வேண்டாம். நீங்கள் ஒரு காரியத்தைப் பார்த்து புரிந்துகொள்ளும்படி எனக்குள்ள எல்லாவற்றோடும் நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். புரிகிறதா? நண்பர்களே, அது உங்களுடைய நன்மையாய் உள்ளது. அது உங்களுடைய பட்சமாகவே உள்ளது. புரிகிறதா? நான் வெறுமென காணப்பட வேண்டும் என்று இங்கு வரவில்லை. செல்வதற்கு வேறு இடம் இல்லாததினால், நான் இங்கு வரவில்லை. நான் இங்கு வரும்படி உணர்ந்தபடியால் நான் இங்கு வந்துள்ளேன். கர்த்தர் எனக்கு அளித்திருக்கிற இந்த ஊழியம் இங்கே ஜனங்களுக்கு மத்தியில் அறிவிக்கப்பட வேண்டும் என்று நான் உணர்ந்தேன். தேவன் இப்பொழுது உண்மையாகவே என்னவாயிருக்கிறார் என்று கண்டு உங்களை புரிந்து கொள்ளும்படிக்கு செய்யவே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அவர் தம்முடைய வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட வார்த்தையில் இருக்கிறார். அவர் எப்பொழுதுமே வார்த்தையாயிருக்கிறார். அவர் வாக்களித்த விசேஷ குணத்தினால் தம்மை அடையாளங்காட்டுகிறார். ஒரு குறிப்பிட்ட விசேஷ குணாதிசயம் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் எழும்பும், அது வார்த்தையில் உள்ளது, அதன்பின்னர் எழும்ப வேண்டிய இந்த நபரின் விசேஷ குணாதிசயம் அது அந்த நபரில் உள்ளது என்பதை அடையாளங் காட்டுகிறது. அந்தக் காரணத்தினால்தான் இயேசு அவ்வாறு அவர் இருக்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் அதைக் கண்டிருக்க வேண்டும். அவர்கள் குருடாயிருந்ததில் வியப்பொன்றுமில்லை. காரியம். அவர் அநேக அற்புதங்களை செய்திருந்தபோதிலும், அவர்கள் அப்பொழுதும் விசுவாசிக்க முடியாமற்போயிற்று என்று கூறப்பட்டுள்ளது, ஏனென்றால் ஏசாயா “அவர்கள் கண்களிலிருந்து காண முடியாமலும், காதுகளிலிருந்து கேட்க முடியாமலுமிருக்கிறார்கள்” என்றான். பார்த்தீர்களா? ஒவ்வொரு காலத்திலுமே, அவருடைய காலத்தில் மாத்திரமல்ல; ஆனால் ஒவ்வொரு காலத்திலுமே, எப்படியாய், “தேவன் பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும் வகை வகையாகவும்” திருவுளம் பற்றினபோதிலும், அவர்களால் அப்பொழுதும் அதைப் புரிந்து கொள்ள முடியாமற் போயிற்று.65-02-17கர்த்தருடைய சமூகத்தினின்று விலகி ஓடிப்போகும் ஒரு மனிதன் 30இப்பொழுது, அவருடைய விசேஷ குணங்கள் ஒருபோதும் தவறிப்போகிறதில்லை. அது எப்பொழுதுமே மாறாததாயுள்ளது. இப்பொழுது, நினைவிருக்கட்டும், அவருடைய விசேஷ குணம், தேவனுடைய விசேஷ குணம் தவறிப்போக முடியாது. அது தவறிப் போனால், அப்பொழுது தேவன் தவறிவிடுகிறார். வேதம் எபிரெயர் 13:8-ல், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாததாயிருக்கிறார்” என்று கூறியுள்ளது. ஆகையால் அவர் மாறாத தேவனாயிருக்கிறார். அவர் ஆதியில் எந்தவிதமான குணாதிசயத்தை உடையவராயிருந்தாரோ, அவர் இன்னமும் அதே விசேஷ குணாதிசயத்தையே உடையவராயிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் கிரியை செய்ததுபோலவே, எந்த நேரத்திலும் அவர் செய்த எந்தக் காரியத்தையும் போல, அவர் ஒவ்வொரு முறையும் அதை அந்தவிதமாகவேச் செய்கிறார். அவர் அவ்வாறு செய்யவில்லையென்றால், அது அவருடைய விசேஷ குணாதிசயம் மாறியுள்ளது என்பதாகும், பாருங்கள், அப்பொழுது அவருடைய விசேஷ குணாதிசயங்கள் அது தேவனுடையதல்லாத ஏதோ ஒரு காரியமாயிருந்தது என்பதை காட்சிப்படுத்தும். புரிகிறதா? ஆகையால் நாம் அறியோம்... 31பவுல் கூறினது போல, “எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்? எக்காளமும் விளங்காத சத்தமிட்டால்” இப்பொழுது எக்காளம் “பின்வாங்கும்” சத்தத்தை முழங்க வேண்டியிருந்தால், அதைத் தான் நாம் செய்ய வேண்டும், பின்வாங்குவது. எக்காளம் “தாக்கும்படி” தொனித்தால், அதைத்தான் நாம் செய்ய வேண்டும், அதாவது தாக்குதலே. ஆனால் எக்காளம் என்றால் என்ன? தேவனுடைய வார்த்தையாகும். அது தேவனை அடையாளங்காட்டுகிறது, அது-அது “மேலே போ, அமரு, பின்வாங்கு, கரங்களை குவித்து நில்” என்றாலும், அது என்னவாயிருந்தாலும் சரி. அது தேவனுடைய எக்காள சத்தமாயுள்ளது. விளங்காத சத்தம், ஒரு குறிப்பிட்டக் காரியம் சம்பவிக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறபோது, யாரோ ஒருவர், “ஓ, அது மற்றொரு நாளுக்குரியதாயிருந்தது” என்று கூறுகிறார். அப்பொழுது இங்கே ஒரு விளங்காத சத்தம் உள்ளது. அப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரிகிறதில்லை. இயேசு “நான் என் ஜீவனைக் கொடுக்க எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் உயிரோடெழுப்பவும் எனக்கு அதிகாரம் உண்டு” என்றார். அங்கே எந்த விளங்காத சத்தமும் இல்லை. சமாரிய ஸ்திரீ, “மேசியா வருவார் என்று நாங்கள் அறிவோம்; அவர் வரும்போது, அவர் செய்ததுபோன்ற காரியங்களை அவர் எங்களுக்குச் சொல்லுவார்” என்றாள். அதற்கு அவர், “நானே அவர்” என்றார். ஊஊ. ஆமென். அவர்கள், “எங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்” என்றனர். அதற்கு அவர், “அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள்” என்றார். அவர், “ஆனால் நானே வானத்தில் தேவனிடத்திலிருந்து இறங்கி வந்த ஜீவ அப்பமாயிருக்கிறேன்” என்றார். எந்த விளங்காத சத்தமும் இல்லை. “நானே ஏதேன் தோட்டத்திலிருந்த ஜீவ விருட்சம்.” இல்லை , அதைக் குறித்து எந்த விளங்காத சத்தமும் இல்லை. நிச்சயமாகவே இல்லை. அதைக் குறித்து எந்த விளங்காத சத்தமும் இல்லை. அவர் செய்த ஒவ்வொரு காரியத்திலும் அவர் நிச்சயமுடையவராய் இருந்தார். வேதம் விளங்காத சத்தத்தை அளிக்கிறதில்லை . அது அதனுடைய சத்தத்தில் தேவனுடைய விசேஷ குணத்தை அடையாளங்காட்டுகிறது. இயேசு பரிசுத்த யோவான் 10:37-ல், “நான் என் பிதாவின் கிரியைகளை செய்யாதிருந்தால், என்ன... நான் அந்த என் பிதாவின் விசேஷ குணத்தை பெற்றிருக்கவில்லையென்றால், அப்பொழுது என்னை விசுவாசிக்காதீர்கள். அவைகள் ஒன்றாயிருக்கின்றன, அவைகள் எனக்குள் அவருடைய விசேஷ குணாதிசயத்தை, அவருடைய விசேஷ குணங்களை அடையாளங் காட்டுகின்றன” என்றார். காரணம் பிதா வார்த்தையாயிருக்கிறார், “ஆதியிலே வார்த்தையிருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது,” தேவனுடைய விசேஷ குணாதிசயம் அந்த காலத்திற்கான அவருடைய வாக்குத்தத்ததினால் காட்சிப்படுத்தப்படுகிறது. 32இப்பொழுது அவர் மோசேயின் காலத்தில் வாழ்ந்திருந்தால், அது கிரியை செய்திருந்திருக்காது. மோசே அவருடைய காலத்தில் வாழ்ந்திருந்தால், அதுவும் கிரியை செய்திருந்திருக்காது. அவர் நோவாவின் காலத்தில் வாழ்ந்திருந்தால், அது கிரியை செய்திருந்திருக்காது, அல்லது நோவா அவருடைய காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி. நோவா அந்த நாளுக்கான காரியங்களை தீர்க்கதரிசனமுரைத்துக் கொண்டிருந்தான், அவனுடைய விசேஷ குணமும், அவன் என்ன செய்திருந்தான் என்பதும் தேவனுடைய வார்த்தையோடு அவனை அடையாளங்காட்டினது. மோசேவும் அதேக் காரியத்தைச் செய்தான். இங்கே இயேசு வந்தபோது, அந்த காலத்துக்காக வாக்களிக்கப்பட்டிருந்த வார்த்தை இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனாயிருக்கிற வார்த்தையின் விசேஷ குணத்தினால் அடையாளங் காட்டப்பட்டது. ஆமென். 33சாதாரண ஜனங்களின் மேல் இந்தக் கடைசி நாட்களில் உள்ள பரிசுத்த ஆவியின் பொழிவு தேவனுடைய விசேஷ குணத்தை ஜனங்களோடு அடையாளங் காட்டியுள்ளது. அவர் அதை வாக்குப்பண்ணினார். அது வார்த்தையாயுள்ளது. அவர் அதைச் செய்வதாகக் கூறினார். அதை யாரும் திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது. அவர் அதைச் செய்வதாகக் கூறினார். ஆகையால் அவர் வாக்களித்திருக்கிற இந்த எல்லாக் காரியங்களையும், அதைத்தான் அவர் செய்கிறார். அதுவே அவருடைய விசேஷ குணத்தை அடையாளங்காட்டுகிறது. ஆம் ஐயா. “அதை விசுவாசிக்காதீர்கள், என்னுடைய விசேஷ குணம் தேவனுடையதாயில்லையென்றால், என்னுடைய உரிமை கோரிக்கைகளை விசுவாசிக்காதீர்கள்.” இப்பொழுது யோவான் 14:12-ல், அவர், “என்னை விசுவாசிக்கிறவன், என்னுடைய அடையாளத்தை, என்னுடைய விசேஷ குணத்தை உடையவனாயிருக்கிறான். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று கூறினதைக் கவனியுங்கள். அதுவே அவனுக்குள்ளிருக்கிற கிறிஸ்துவின் விசேஷ குணத்தை அடையாளங்காட்டுகிறது. அவருடைய விசேஷ குணங்களை காட்சிக்குரியதாக்குகிறது. ஆமென். 34எனக்கு தொண்டை கரகரப்பாயிருந்தாலும் நான் இப்பொழுது பக்திபரவசமடைகிறேன். ஆம் ஐயா. ஒரு குறிப்பிட்ட விசேஷ குணாதிசயம் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் எழும்பும், அது வார்த்தையில் உள்ளது, அதன்பின்னர் எழும்ப வேண்டிய இந்த நபரின் விசேஷ குணாதிசயம் அது அந்த நபரில் உள்ளது என்பதை அடையாளங்காட்டுகிறது. அவர், “என்னுடைய விசேஷ குணம் என்னை , தேவன் அவருக்குள்ளிருப்பதை அடையாளங்காட்டவில்லையென்றால், அப்பொழுது (அவன்) அவரை விசுவாசிக்க வேண்டியதில்லை” என்று அதேக் காரியத்தையேக் கூறினார். இப்பொழுது அவர் அதில் அடையாளங் காட்டப்படுவார் என்றும் கூட அவர் கூறினார். ஆகையால், அது, அது அவரை அடையாளங்காட்டவில்லையென்றால், அப்பொழுது அவன் என்ன கூறுகிறானோ அது அவனல்ல. இன்றைக்கு, கிறிஸ்து தம்மை அடையாளங்காட்டவில்லையென்றால், கிறிஸ்துவின் விசேஷ குணமே நாம் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறோம் என்பதையும், வார்த்தையை விசுவாசிக்கிறோம் என்பதையும் அடையாளங்காட்டுகிறது. இயேசு வார்த்தையாயிருந்தார், ஆகையால் அவர் வார்த்தையை விசுவாசிக்க வேண்டியதாயிருந்தது. நாம் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறோம் என்று நாம் கூறி, எப்படி அந்த வேதாகமத்தின் எந்த வார்த்தையையும் மறுதலிக்க முடியும்? பரிசுத்த ஆவியாகிய கிறிஸ்து தேவன் உங்களுக்குள் இருப்பதாயுள்ளது, அது ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் ஒரு, “ஆமென்” என்பதனால் வலியுறுத்திக் கூறும். வேதம், “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன” என்று கூறும்போது, அதற்கு தேவனுடைய ஆவி, “ஆமென்” என்றேக் கூறும். புரிகிறதா? அவைகளில் ஒன்றும், “இல்லை , அது மற்றொரு காலத்திற்கானதாயிருந்தது; அது சீஷர்களுக்கானதாய் மாத்திரமே இருந்தது” என்று கூறுவதில்லை. “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். அவர் உலகமெங்கும், விசுவாசிக்கிறவனை இந்த அடையாளங்கள் பின் தொடரும், அதேக் காரியம்.” “நேற்றும், இன்றும், மாறதவராயிருக்கிறார்” என்ற விசேஷ குணமே அடையாளங்கண்டு கொள்ளப்படுகிறது. 35அதையே எபிரெயர் 1:1 கூறுகிறது, “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,” அவர் பூர்வகாலங்களில் அடையாளங்காட்டின அதே விசேஷ குணத்தினால் இன்றைக்கு உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை அடையாளங்காட்டுகிறார். நீங்கள் கவனித்தீர்களா? தேவன் தம்முடைய வழியை ஒருபோதும் மாற்றுகிறதில்லை. பண்டைய வேதாகமத்தில் ஒரு சொப்பனக்காரன் ஒரு சொப்பனத்தைக் காணும்போது, அந்த சொப்பனம் சரியா அல்லது இல்லையா என்று கண்டறிய தேசத்திலே எந்த தீர்க்கதரிசியும் இல்லாமலிருந்தால், அப்பொழுது அவர்கள் அதைக் கண்டறிய மற்றொரு முறையை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் அந்த சிறப்பியல்பை ஏற்றுக்கொண்டு, யார் சொப்பனங்கண்டிருந்தாலும், அவனை ஆலயத்திற்கு கொண்டு சென்றனர். அப்பொழுது அங்கே பிரதான ஆசாரியனாயிருந்த ஆரோனின் மார்ப்பதக்கம் ஆசாரிப்புக் கூடார நிலைக்காலின் மேல் தொங்கும். அப்பொழுது இந்த சொப்பனக்காரன் இந்த சொப்பனத்தைக் கூறுவான். அது எவ்வளவு நல்லதாக தென்பட்டாலும், அது எவ்வளவு உண்மையாக தென்பட்டாலும் அது ஒரு பொருட்டல்ல; ஊரீம் தும்மீம் என்று அழைக்கப்படுகிற அந்தக் கற்களின் மேல் (வேத வாசகர்கள் அறிவர்) ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஒளி பிரகாசிக்காதிருந்தால், அப்பொழுது அது எவ்வளவு உண்மையாக தென்பட்டாலும் நான் கவலைப்படுகிறதில்லை, அது உண்மையில்லாததாய் இருந்தது. தேவனுடைய வழக்கத்திற்கு மாறான தன்மை, தேவனுடைய விசேஷத்த குணம், அவர் தம்மை செய்தியின் பேரில் அடையாளங்காட்டினார் என்று காண்பிக்கும்படியான இயற்கைக்கு மேம்பட்டதில் அவருடைய விசேஷ குணங்களை காட்சிப்படுத்த வேண்டியதாயிருந்தது. ஆமென். நான் அதேக் காரியத்தையே இன்றிரவுக் கூறுகிறேன். பண்டைய ஊரீம் தும்மீம் போய்விட்டது, ஆனால் வார்த்தையோ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வாக்குத்தத்தத்தின் நேரத்தையும், தேவனுடைய விசேஷக் குணத்தை அடையாளங்காட்டுகிற காரியமாய் இன்னமும் உள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வாக்குத்தத்தத்தின் நேரத்தினால் அடையாளங்காட்டப்படுகிற தேவனுடைய விசேஷ குணங்கள் உண்டு. 36அது அவர் இருந்ததைப்போன்றே அதே தேவனாக்குகிறது. “பூர்வ காலங்களில்,” பாருங்கள், “பங்கு பங்காகவும் வகை வகையாகவும் அவர் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றினார்.” நியாய்ப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான் வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் பரலோக ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது. கவனியுங்கள், “ஆனால் இந்த கடைசி நாட்களில்,” அவர் அப்பொழுது செய்த அதேக் காரியத்தைப், “அவருடைய குமாரன் கிறிஸ்து இயேசு மூலமாய்” திருவுளம் பற்றினார். “பூர்வ காலங்களில் பங்குபங்காகவும் வகை வகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில்” அதேக் காரியத்தைச் செய்து, “(பிதாக்களிடத்தில் பேசினதுபோல) தம்முடைய குமாரன் கிறிஸ்து இயேசு மூலமாய் ஜனங்களிடத்தில் திருவுளம்பற்றினார்.” மரித்தோரிலிருந்து அவரை எழுப்பியிருக்கிறார், அவர் நமக்குள்ளே ஜீவிக்கிறார், காரியங்களை நமக்கு முன்னறிவித்தது, அவர் இருதயத்தின் நினைவுகளையும், இருதயத்தின் யோசனைகளையும் வகையறுக்கிறவராயிருக்கிறார் என்று தம்மை அடையாளங்காட்டுகிறார். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்! “பூர்வ காலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்து மூலமாய் திருவுளம்பற்றினார்.” வேதமானது இடையில் புகுந்து மாற்றப்பட முடியாது. அது முற்றிலும் உண்மையே. 37நான் முன்னமே கூறியுள்ளதுபோல, இந்த வார்த்தையை வியாக்கியானிக்க தேவனுக்கு எவருமே தேவையில்லை. அவரே தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிக்கிறார். அவர் எந்தக் காரியத்தையாவது கூறும்போது, அது சம்பவிக்கிறது, அதுவே வியாக்கியானமாயுள்ளது. புரிகிறதா? அவருக்கு எவருமே, “நல்லது, நான் அது இந்தவிதமாக பொருள்படுகிறது என்று நம்புகிறேன்” என்று கூற வேண்டியதில்லை. தேவன் அதை தம்முடைய சொந்த வியாக்கியானத்தினால் அடையாளங்காட்டுகிறார், அவருடைய. அந்த நாளுக்கான வாக்குத்தத்தமாயிருந்தால் நலமாயிருக்குமே! நாம் லூத்தரின் வெளிச்சத்தில் ஜீவிக்க முடியாது. நாம் வெஸ்லியின் வெளிச்சத்தில் ஜீவிக்க முடியாது. நாம் அவர்கள் எவருடைய வெளிச்சத்திலுமே ஜீவிக்க முடியாது. நாம் இந்நாளுக்காக வாக்களிக்கப்பட்டுள்ள வெளிச்சத்தில் ஜீவிக்க வேண்டும். 38மோசே எகிப்திற்கு சென்றிருந்து, “நாம் ஒரு பெரிய பேழையைக் கட்டப் போகிறோம். நாம் இந்த தேசத்திலிருந்து மிதந்து செல்லப் போகிறோம். நைல் நதியில் தண்ணீர் உயரப் போகிறது” என்று கூறியிருந்தால் எப்படியிருந்திருக்கும்? அப்பொழுது அவர்கள் வேதாகமத் தோல் சுருளில் தேடிப்பார்த்திருப்பார்; அதைக் குறித்த வாக்குத்தத்தம் அங்கே இல்லை. அது உண்மை. ஆனால், நீங்கள் பாருங்கள், அவன் தன்னை தேவனுடைய தீர்க்கதரிசியாக அடையாளங்காட்டினான், ஏனென்றால் அவன் கூறினது நிறைவேறியது, அப்பொழுது அவன் கர்த்தருடைய வார்த்தையை உடையவனாயிருந்தான் என்று அவர்கள் அறிந்து கொண்டனர். பார்வோன் ஈட்டிகளை உடையவனாயிருந்தான், ஆனால் மோசே வார்த்தையை உடையவனாயிருந்தான். ஆகையால் அவர்கள் சமுத்திரத்தண்டை வந்தபோது, எல்லா ஈட்டிகளும் சமுத்திரத்தின் கீழாய்ச் சென்றன; அப்பொழுது மோசே இஸ்ரவேலரை சமுத்திரத்தின் குறுக்கே உலர்ந்த தரையில் அழைத்துச் சென்றான், ஏனென்றால் அவன் வார்த்தையை உடையவனாயிருந்தான், அவன் அந்த வேளையின் வார்த்தையாயிருந்தான். மோசே அந்த வேளைக்கான வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாயிருந்தான். எலியா அந்த வேளைக்கான வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாயிருந்தான். கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாயும், அவர் உண்டுபண்ணின வாக்குத்தத்தங்களுமாயிருக்கிறார். “இன்னும் கொஞ்சங்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்.” அவர் இந்தக் காரியங்களை வாக்குப்பண்ணினார். அது என்ன? அவர் எல்லாக் காலங்களிலும் செய்ததுபோல, அது தேவனுடைய விசேஷ குணம் தம்முடைய வார்த்தையை காட்சிப்படுத்துகிறதாகும். 39மல்கியா 4-ல் அவர், “இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். அந்த நாள் வருகிறதற்கு முன்னே அவன் பிதாக்களின் விசுவாசத்தை மீண்டும் பிள்ளைகளுக்குத் திரும்பளிப்பான்,” என்றார். அவர் அதை வாக்குப்பண்ணினார். இயேசு பரிசுத்த லூக்கா 17-ம் அதிகாரத்தில், “மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படும்போது, சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருகையிலும் அவ்வண்ணமே இருக்கும்” என்றார். வெளிப்பாடு வெளிப்படும் அந்த நாட்களில் உலகம் சோதோமைப் போலிருக்கும், அது என்னவாயிருக்கும்? அந்த வேதவாக்கியத்தின் விசேஷப் பண்பு நிறைவேற்றப்படுகிறது. தேவன் தம்முடைய விசேஷ குணத்தினால், அவர் எப்பொழுதும் கொண்டுள்ள விசேஷ குணங்களினால் தம்மை அடையாளங்காட்டுகிறார். அவரால் அதை விட்டுவிட முடியாது. 40கடைசி நாட்களில் அவர் தம்முடைய குமாரனினூடாக அடையாளங்காட்டினார். எப்படியாய் தேவன் இவைகளை எப்பொழுதும் செய்கிறார் என்பதைக் கவனியுங்கள் அவர். அவர் ஒருபோதும் தம்முடைய வழியை மாற்றுகிறதில்லை. இந்த மூன்று புருஷரும் ஆபிரகாமிடத்தில் பேசினர், நாம் அங்கே சோதோமின் நாட்களைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். ஆபிரகாம் தேவனை விசுவாசித்த ஒரு மனிதனாயிருந்தான். அவன் அவருடைய வாக்குத்தத்தின்படி தேவனை ஏற்றுக் கொண்டான். சாராள், அவனுடைய மனைவியோ அறுபத்தைந்து வயதுடையவளாயிருந்தாள், தேவன் ஆபிரகாமை அழைக்கும்போது, அவன் எழுபத்தைந்து வயதுடையவனாயிருந்தான். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்று அவர் கூறினார்; ஆபிரகாம் சாராளினால் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வான். இது சற்று முட்டாள்தனமாய்த் தென்படலாம். ஆனால் அவள் சிறு குழந்தைக்குரிய காலுறைகளையும், ஊசிகளையும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் ஆயத்தம் செய்ததை நான் யூகித்துப்பார்க்கிறேன், ஏனென்றால் அவர்கள் இந்த குழந்தையைப் பெற்றுக்கொள்ளப் போவதாயிருந்தனர். முதல் இருபத்தெட்டு நாட்களுக்குப் பிறகு, ஏன்? ஆபிரகாம் சாராளிடத்தில், “அன்பே, நீ எப்படி உணருகிறாய்?” என்று கேட்டிருக்க வேண்டும். அதற்கு அவளோ, “எந்த வித்தியாசமுமில்லை” என்றிருப்பாள். அப்பொழுது அவன், “தேவனுக்கு மகிமை, நாம் அதை எவ்வாறாயினும் பெற்றுக்கொள்ளப் போகிறோம்” என்றிருப்பான். அதற்கு அவள், “உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டிருப்பாள். அப்பொழுது அவனோ, “தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்” என்றிருப்பான். பின்னர் ஒரு வருடம் கடந்துவிட்டது. அப்பொழுது அவன், “அன்பே, நீ எப்படி உணருகிறாய்?” என்று கேட்டிருப்பான். அதற்கு அவளோ, “எந்த வித்தியாசமுமில்லையே” என்றிருப்பான். அப்பொழுது அவன், “நாம் அதை எப்படியும் பெற்றுக்கொள்ளப் போகிறோம். தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்” என்றிருப்பான். பின்னர் ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. அப்பொழுது அவன், “அன்பே, நீ இப்பொழுது எப்படி உணருகிறாய்?” என்றிருப்பான். அதற்கு அவளோ, “எந்த வித்தியாசமுமில்லையே” என்றிருப்பாள். அப்பொழுதும் அவன், “நாம் அதை எப்படியும் பெற்றுக்கொள்ளப் போகிறோம். தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்” என்றிருப்பான். 41அது என்னவாயிருந்தது? அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உடையவனாயிருந்தான். அவன் தேவனை விசுவாசித்தான், அவன் தேவனைப் போன்றே செயல்பட்டான்: அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட வார்த்தையைப் பற்றியிருந்தான். இருபத்தைந்து வருடங்கள் கடந்துவிட்டிருந்தன. குழந்தையின் காலுறைகளோ மஞ்சள் நிறமாக மாறிவிட்டிருந்தன, ஆனால் அவள் அவைகளை அப்பொழுதும் அப்படியே வைத்திருந்தாள். இப்பொழுது, அவன் வயோதிகனாய், கூனனாய் குனிந்துவிட்டான். அவன் ஒரு பயங்கரமான வயோதிகத் தோற்றத்தில் இருந்தான். சாராளுடைய கர்ப்பமோ மரித்துப் போயிருந்தது. அவன் மலட்டுத் தன்மை கொண்டிருந்தான். அவர்கள் என்னே ஒரு நிலைமையில் இருக்கின்றனர். அவனுடைய பாவனை விசுவாச நண்பர்கள் அவனிடத்தில், “ஆபிரகாமே, ஜாதிகளின் தகப்பனே, நீ எப்படி உணருகிறாய்?” என்று கேட்டிருப்பார்கள். அப்பொழுது அவனோ, “பரவாயில்லை, தேவனுக்கு மகிமை, நான் அருமையாக உணருகிறேன். நாங்கள் எப்படியும் அந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளப் போகிறோம்” என்று கூறியிருப்பான். காரணம் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். ஆமென். அதுவே ஒரு விசுவாசியின் விசேஷ குணமாய் உள்ளது. உங்களைக் குறித்து என்ன? புரிகிறதா? ஆபிரகாமின் பிள்ளைகளான நம்மைக் குறித்து என்ன? ஒரு வாக்குத்தத்தத்தின் காரணமாக நாம் தேவனுடைய வார்த்தையோடு அடையாளங்கண்டு கொள்ளப்படுகிறோமா? நாம் அதை உண்மையாகவே விசுவாசிக்கிறோம் என்று நம்முடைய விசேஷ குணாதிசயம் நம்மை அடையாளங்காட்டுகிறதா? இல்லையென்றால் நீங்கள் அவிசுவாசமாய் இப்படியும் அப்படியும் பேசி, தட்டுத்தடுமாறி அதைக் குறித்து சந்தேகப்படுகிறீர்களா? அப்படியானால் நாம் கிறிஸ்தவர்கள் அல்ல, நாம் விசுவாசிப்பதாக பாவனை செய்கிறோம். ஆனால், நாம் அந்த வாக்குத்தத்தத்திற்கு உண்மையாக நிற்கும்போது, சரியாக அதற்கு கீழ்படிந்து நிற்கும்போது, அதனோடு தரித்திருப்போம். ஆபிரகாம் அதைச் செய்தான். 42ஒரு நாள் அவன் மூன்று புருஷர் நடந்து வருவதைக் கண்டான் என்று நாம் கண்டறிகிறோம். வேதமோ இங்கே, “அது உஷணமான நாளாயிருந்தது” என்று கூறியுள்ளது. அது கிட்டத்தட்ட மதிய வேளையாய் இருந்திருக்க வேண்டும். இந்தப் புருஷர் நடந்து வந்து அவனிடத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் சோதோமிற்குச் சென்று விட்டனர் என்று நாம் அறிகிறோம். நாம் அதன் பேரில் அன்றொரு இரவு பேசினோம் என்று நான் நினைக்கிறேன். அவர்களில் ஒருவர் ஆபிரகாமோடு தரித்திருந்தார். இந்த மனிதன்...அழைக்கப்பட்டவர்...ஆபிரகாமோடு தரித்திருந்து, அந்த மனிதன் என்ன செய்தார் என்று கவனியுங்கள். ஒருவர் அவருடைய விசேஷ குணத்தினால் அடையாளங்கண்டு கொள்ளப்பட்டார், அது ஏலோஹீம் என்பவராயிருந்தார். ஏலோஹீம், வேதத்தில் உள்ள முதல் வார்த்தை, “ஆதியிலே தேவன்...' என்பதாகும். இப்பொழுது வேதபண்டிதர்களாகிய நீங்கள் எவரும் அந்த வார்த்தை, அங்கே தேவன் என்பது எபிரெய பாஷையில் ”ஏலோஹீம்“ என்று பொருள்படுகிறது என்பதை அறிவீர்கள். அதன் பொருள் ”சர்வவல்லமையுள்ளவர், எல்லாவற்றிற்கும் போதுமானவர், தன்னில்தானே ஜீவிப்பவர்“ என்பதாகும். எவரிடத்திலிருந்தும் எந்த உதவியும் தேவைப்படுகிறதில்லை, எவருடைய வியாக்கியானமும் தேவையில்லை; அவருடைய சொந்த வியாக்கியானமே அதை செய்கிறது. அவர் எல்லாவற்றிற்கும் போதுமான தேவனாய், சர்வ வியாபியாய், சகலமும் அறிந்தவராய், சர்வ வல்லமையும் படைத்தவராயிருக்கிறார். அவர் தேவனாயிருக்கிறார். 43அவர் அங்கிருந்தார். இப்பொழுது ஆபிரகாம், வார்த்தையைப் பற்றிருந்த இந்த கோத்திரப்பிதா இந்த நபரை நோக்கிப் பார்த்தான். இந்த நபரோ தன்னுடைய முதுகை கூடாரப்பக்கமாகத் திருப்பியிருந்தார், அப்பொழுது அவர், “உன் மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “அவள் உமக்குப் பின்னே கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். அப்பொழுது அவர், “ஓரு உற்பவ காலத்திட்டத்தில் நான் உன்னை சந்திக்கப் போகிறேன், அப்பொழுது நான் உனக்கு வாக்குப்பண்ணின இந்தக் குழந்தையை நீ பெற்றுக் கொள்வாய்” என்றார். சாராள் அதைக் குறித்து நகைத்தாள். அவனிடத்தில் பேசிக் கொண்டிருந்த அந்த ஒருவர், அவருவருக்கு பின்னே கூடாரத்தில் இருந்த சாராள் என்ன கூறினாள் என்பதை ஆபிரகாமிடத்தில் கூறினார். இப்பொழுது, ஆதியாகமத்தில் நீங்கள் அதை வாசித்துப் பார்க்கலாம். ஆபிரகாம், இந்த மனிதன் தன்னை அடையாளங்காட்டின பிறகு.. அப்பொழுது நாம் அதைக் கண்டறிகிறோம்... அது என்னவாயிருந்தது? எபிரேயர் 4-வது அதிகாரம், 12வது வசனம், “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்று கூறியுள்ளது. இது அந்த மனிதன் என்பதை அவன் அறிந்து கொண்டான். அங்கே தேசத்திலே அவனைத் தவிர வேற தீர்க்கதரிசிகளேயில்லாதிருந்ததை அவன் அறிந்திருந்தான், ஆகையால் கர்த்தருடைய வார்த்தை அவனிடத்திற்கு வந்திருந்தது. அவன் தீர்க்கதரியாயிருந்தான், இங்கே வார்த்தை தீர்க்கதரியண்டை வந்தது. 44அதேக் காரியம்தான் யோவான் ஸ்நானகனோடும் இருந்தது. அப்பொழுது நானூறு வருடங்களாக ஒரு தீர்க்கதரியும் இல்லாமலிருந்தனர். நான் நினைத்துப் பார்க்கிறேன்... ஒருகால் வயோதிக வேத பண்டிதர் டேவிஸ் இங்கே இன்றிரவு அமர்ந்து கொண்டிருக்கலாம், விசுவாசத்தில் எனக்கு ஞானஸ்நானங் கொடுத்த பண்டைய மிஷெனரியான பாப்டிஸ்டு பிரசங்கியார். அவர் முன்பெல்லாம் என்னோடு வாதிடுவார். அப்பொழுது அவர், “பில்லி, நீ இப்பொழுது ஒரு குழந்தையாயிருக்கிறாய். எனவே நீ எனக்குச் செவிகொடுக்கத்தான் வேண்டும்” என்று கூறினார். நானும், “சரி, சகோதரன் டேவிஸ், நான் செவிகொடுத்துக் கொண்டுதானேயிருக்கிறேன்” என்றேன். அவர், “நீ பார், யோவான் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை . ஆனாலும் அவன் ஞானஸ்நானங் கொடுத்துக் கொண்டிருந்தான், ஆனால் அவன் ஞானஸ்நானம் பண்ணப்படாதிருந்தான்; எனவே அவனுக்கு ஞானஸ்நானங் கொடுக்க எவருமே பாத்திரவனாயிருக்கவில்லை” என்றார். அது நல்ல பாப்டிஸ்டு வேத சாஸ்திரமாயுள்ளது. “இங்கே இயேசு வந்தபோது, அப்பொழுது கூறினான். யோவான், 'நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா?' என்றான். அதற்கு அவர், 'இப்பொழுது இடங்கொடு'' என்றார். அவர், ”அப்பொழுது அவன் அவருக்கு 'இடங்கொடுத்த போது,'“ ”நீங்கள் பாருங்கள், அப்பொழுது யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, அப்பொழுது வானங்கள் திறந்திருக்கவும், ஒரு புறாவின் ரூபத்தில் தேவன் அவர் மேல் இறங்கி வருவதையும் அவன் கண்டான். அப்பொழுது, 'இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்“ என்றார். ஆனால், வேத பண்டிதர் டேவிஸ் அவர்களோடு உடன்படாமலிருப்பதற்காக அல்ல, இல்லை, ஆனால் அவர் தவறாயிருந்தார். 45பாருங்கள், யோவான் தீர்க்கதரிசியாயிருந்தான், வார்த்தை எப்பொழுதுமே தீர்க்கதரியினிடத்திற்கே வருகிறது. ஆகையால் வார்த்தை மாம்சமானபடியால், அது எப்படியும் தீர்க்கதரிசியினிடத்திற்கு வரவேண்டியதாயிருந்தது; ஏனென்றால் அவன் வார்த்தையைக் குறித்து சாட்சி பகர்ந்து கொண்டிருந்தான், அவனுடைய விசேஷ குணம் அதை அவனுக்கு அடையாளங் காட்டினது. இங்கே வார்த்தை வருகிறது, இப்பொழுது என்ன சம்பவித்தது? அவன் இயேசுவின் முகத்திற்கு நேரே நடந்து சென்றவுடனே, யோவான், “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா?” என்றான். இயேசு, “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது (நமக்கு கடமையாக அமைகிறது), நமக்கு ஏற்றதாயிருக்கிறது” என்றார். யோவான் தீர்க்கதரிசியாயிருந்தான்; அவர் வார்த்தையாயிருக்கிறார். அவர் பலியாயிருந்தார், அவர் தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தில் பிரவேசிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார், பலியானது அது செலுத்தப்படுவதற்கு முன்னர் கழுவப்பட வேண்டியதாயிருந்தது. யோவான் அவருக்கு ஞானஸ்நானங் கொடுத்தான், ஏனென்றால் அவன் அறிந்திருந்தான். “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது.” பலியானது செலுத்தப்படுவதற்கு முன்னர் கழுவப்பட வேண்டியதாயிருந்தது, எனவே யோவான் அவருக்கு ஞானஸ்நானங் கொடுத்தான். அது இயேசு யோவானுக்கு ஞானஸ்நானங் கொடுத்ததாயிருக்கவில்லை. யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நான கொடுத்தான். “இப்பொழுது இடங்கொடு.” 46கவனியுங்கள், இங்கே ஆபிரகாமிருந்தான், அவன் கர்த்தருடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். கர்த்தருடைய வார்த்தை அவனிடத்திற்கு வந்தது. அவன் தீர்க்கதரிசியாயிருந்தான். இப்பொழுது இங்கே வார்த்தை வருகிறது. அவர் அவனை, “ஆபிரகாம்” என்று அழைத்தார். ஆபிராம் என்றழைக்கவில்லை. அதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் அவனுடைய பெயர் ஆபிராம்-ஆபிராம் என்பதாயிருந்தது, இப்பொழுது அது ஆபிரகாம் என்பதாயுள்ளது. அவனுடைய மனைவி சாராய் என்பதாயிருந்தது, இப்பொழுது அது “சாராள்” என்பதாகும், சாராய் என்றல்ல; சாராள். ஆபிராம் அல்ல (ஆ-பி-ர-கா-ம்), ஆனால் ஆபி-ர-கா-ம், ஆபிரகாம். அவர், “ஆபிரகாமே!” என்று அழைத்த போது, இந்த மனிதன் தன்னை அடையாளங்காட்டினார். ஓ, என்னே! ஆபிரகாம், “ஏலோஹீம்!” என்றான். வார்த்தையும், தீர்க்கதரிசியும் ஒன்று சேர்ந்து, இரண்டுமே விசேஷ குணங்களை அடையாளங்காட்டினர். ஏலோஹீம், அவர், “உன் மனைவி சாராள் எங்கே?” என்றார். அதற்கு ஆபிரகாம், “அவள் உமக்குப் பின்னே உள்ள கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். அப்பொழுது அற்புதம் செய்து காட்டப்பட்டது. ஏலோஹீம்! ஆபிரகாம் அவரை, “எல்லாவற்றிற்கும் போதுமானவர், சர்வ வல்லமையுள்ளவர், சர்வ வல்லமை படைத்த தேவன்” என்று அழைத்தான். இயேசு கூறினார். அவர் பூமியின் மேலிருந்தபோது, அவர் ஏலோஹீம் செய்த அதேக் காரியத்தைச் செய்தார். அது தேவனாயிருக்கிற அவருடைய விசேஷ குணத்தை அடையாளங்காட்டினது. அவர், “கடைசி நாட்களில் மனுஷ குமாரனுடைய வருகைக்கு முன்பாக, அவர் வெளிப்படும்போது, இந்தக் காரியம் சோதோமில் இருந்தது போலவே இந்த காட்சி அமைப்பு மீண்டும் சம்பவிக்கும்” என்றார். ஏலோஹீம் தம்முடைய ஜனங்களுக்கு மத்தியில் இருக்கிறார், சர்வ வல்லமையுள்ள தேவனே! அதைத்தான் வேதம் கூறுகிறது. ஏலோஹீம் ஜனங்களுக்கு மத்தியில் இருக்கிறாரே! ஏலோஹீம், தேவன், அவர் நாற்பது வருடங்களாக நம்மை பரிசுத்த ஆவியினால் அபிஷேகித்துக் கொண்டிருக்கிறாரே! சபை... 47பாருங்கள், ஆபிரகாம் ஒரு அடையாளத்தைக் கண்டான், மற்றொரு அழைப்பு; ஒரு அடையாளம், ஒரு அழைப்பு; ஒரு அழைப்பு, ஒரு அடையாளம்; அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனுக்காக காத்திருந்தான். ஆனால் அவன் கண்ட கடைசி அடையாளம், கடைசி பிரசன்னமாகுதல், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் காட்சியில் வந்தடையும் முன் கடைசியான தேவனுடைய விஜயத்தில் ஏலோஹீம் மாம்ச சரீரத்தில் இருந்தார். அதன் பின்னரே வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரன் வந்தார். ஆபிரகாமினுடைய வித்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் அடையாளங்களை, பரிசுத்த ஆவியின் பொழிவை, அந்நிய பாஷைகளில் பேசுதல், தெய்வீக சுகமளித்தல் போன்றவற்றைக் கண்டிருக்கின்றனர். ஆனால் மனுஷ குமாரன் வெளிப்படும்போது, ஏலோஹீம் ஆபிரகாமின் ராஜரீக வித்தினிடத்திற்கு திரும்பி வந்து, அந்த நாளில் அவர் காண்பித்த அதேக் காரியத்தைக் காண்பிப்பார், ஆமென், ஏலோஹீம், அப்பொழுது அது இருந்ததுபோலவே! ஏன்? அது தேவனுடைய விசேஷ குணமாயிருக்கும். இப்பொழுது கிறிஸ்து தேவனாயிருந்ததால், “இன்னும் கொஞ்சங் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் நிறைவுபெறும் வரைக்கும், முடிவுபரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்” என்றார். 48இயேசு அதை லூக்கா 17-ம் அதிகாரத்தில் கூறினார். சரி, நாம் விசுவாசித்து, இந்த கடைசி நாட்களைக் காணும்போது, இந்த காட்சி அமைப்பு மீண்டும் நிகழ்த்திக்காட்டப் பட வேண்டியதாயுள்ளது. ஆகையால் எபிரேயர் 1:1, “பூர்வகாலங்களில் தம்மை தீர்க்கதரிசிகள் மூலமாய் அடையாளங்காட்டின தேவன் இந்தக் கடைசி நாட்களில் மரித்தோரிலிருந்து எழுந்த தம்முடைய குமாரனின் உயிர்த்தெழுதலை அடையாளங் காட்டியுள்ளார்” என்று உரைத்துள்ளது. அவருக்கிருந்த அதே விசேஷ குணத்தை சபைக்கு அளிப்பதனால் சரியாக எபிரெயர் 13:8-ஐ உருவாக்குகிறது. அதிலிருந்து எந்த இறகுகளையுமே பிடுங்கியெடுக்க முடியாது. அது கழுகினுடைய இறகுகளாய் உள்ளன. அவைகள் இறுக்கமாக தரித்திருக்கின்றன, ஏனென்றால் அவைகள் வானத்திற்குரிய பறவைகளாகும். (ஒலிநாடாவில் காலி இடம்- ஆசி.]. அவைகள் கழுகின் ஆகாரத்தையே போஷிக்கின்றன. 49இப்பொழுது நாம், “பூர்வ காலங்களில் பங்குபங்காகவும், வகைவகையாகவும் அவர் தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றி இந்தக் கடைசி நாட்களில் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்து மூலமாய்த் திருவுளம் பற்றினார், அவரை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பியிருக்கிறார்,” என்பதைக் கவனிக்கிறோம். இங்கே அவர் நமக்கு மத்தியில், தீர்க்கதரிசிகளில் ஒருவராய் அல்ல; இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அதே மாறாத இயேசுவாயிருக்கிறார்; இயேசு, அல்லேலூயா, உயிர்த்தெழுந்த தேவ குமாரனே! இயேசு ஒரு நாள் கூறினார், அவர், “ஓர் பொல்லாத, விபச்சார சந்ததியார் ஒரு அடையாளத்தைத் தேடுகிறார்கள், அவர்கள் ஒரு அடையாளத்தைப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார். ஒரு பொல்லாத விபச்சார சந்ததியார். உலகமானது இப்பொழுது உள்ளதைக் காட்டிலும் எப்பொழுது அதிக பொல்லாததாயும் அல்லது விபச்சாரத்தையுடையதும் மற்றும் தாறுமாறாக்கப்பட்டதுமாயிருந்தது? “யோனாவின் நாட்களில் இருந்ததுபோல, யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷ குமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருக்க வேண்டும்.” அப்பொழுது “ஓரு பொல்லாத விபச்சார சந்ததியார்” ஒரு அடையாளத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. என்ன விதமான ஒரு அடையாளம்? ஒரு உயிர்த்தெழுதலின் அடையாளம். நாம் அதை இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு இன்றைக்கு உடையவர்களாய் இருக்கிறோம், அவர் இன்னமும் உயிரோடிருக்கிறார். அவர் இன்றிரவு நமக்கு மத்தியிலே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் தேவனுடைய விசேஷ குணங்களினால் தம்மை அடையாளங் காண்பித்துக்கொண்டு, இந்த நாளில் அவர் செய்வதாக வாக்குப்பண்ணினதில் உள்ள வார்த்தையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். ஆமென். அதுதான் வார்த்தையாயுள்ளது. இப்பொழுது அடுத்தக் காரியமோ அவருடைய குமாரனின் மூலம் அவருடைய அடையாளத்தை, இந்த கடைசி நாட்களில், அந்த அடையாளத்தை நீங்கள் விசுவாசிப்பீர்களா என்பதேயாகும். கவனியுங்கள். 50தேவன் பூர்வ காலங்களில் மோசேயினிடத்தில் பேசினார். உபகாமம் 18:15, “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்ப்பண்ணுவார்” என்று உரைத்தது. இப்பொழுது கவனியுங்கள். அதுவே வார்த்தையாயுள்ளது. அது வார்த்தையாயுள்ளது. அது தேவனாயிருந்தது. அது மோசேயாயிருக்கவில்லை. அவர் ஒரு மனிதனாயிருந்தார் என்பதை மோசே எப்படி அறிவான்? ஆனால் தேவன் மோசேயினூடாகப் பேசி, இதைக் கூறினார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சரி. இப்பொழுது இயேசுவைக் கவனியுங்கள், அவருடைய அவருடைய விசேஷ குணங்கள் இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை எப்படி உண்மையென்று அடையாளங்காட்டினது என்பதை கவனியுங்கள். அவர் நிச்சயமாகவே அடையாளங்காட்டினார். மோசே கூறினவிதமாகவே அவர் இருப்பார் என்ற இந்த விசேஷ குணத்தினால் அவர் அடையாளங்காட்டப்பட்டார். இன்றைக்கு உள்ளதுபோல அவர்களில் அநேகர், அவர்கள் ஒரு மகத்தான தலைவரைக் காண விரும்பினர். “ஓ, இவர் வேத பண்டிதத்தில் தத்துவம் பட்டம் பெற்றவராயிருக்கிறார். இன்னார்இன்னார். அவர் ஹார்ட்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து படித்து வந்தவராயிருக்கிறார். அதாவது அவர் அந்த விதமான ஒரு மகத்தான பெரிய எங்கோ ஓரிடத்திலிருந்து படித்து வந்திருக்கிறார்.” அது தேவனுடைய அடையாளமல்ல. இல்லை, இல்லை. அதைக் குறித்த ஒரு காரியமும் இல்லை. தேவனை அடையாளங்காட்டுகிறதே வார்த்தையாகும். புரிகிறதா? இயேசு ஒரு பண்டிதராயிருக்கவில்லை , அவர் ஒரு ஆசாரியராயும் இருக்கவில்லை , அவர் உலகத்திற்கு ஒரு ரபீயாகவும் இருக்கவில்லை . அவர் உலகத்திற்கு ஒரு துரோகியாக கருதப்பட்டார். ஆனால் தேவன் அவர் மூலமாக தம்முடைய வார்த்தையை உறுதிபடுத்திக் கொண்டிருந்தார், அது அவரை இம்மனுவேலாக்கினது. அதுவே அவருடைய அடையாளமாயிருந்தது. இப்பொழுது, இங்கே, தேவன் பூர்வ காலங்களில் மோசேயினூடாக அவர் செய்வதாக, அவர் என்ன செய்வதாகக் கூறினாரோ அதை இயேசு சரியாக செய்தார். 51இப்பொழுது அவர் பேதுருவை சந்தபோது கவனியுங்கள், அன்றொரு இரவு நாம் அதை நாடக வடிவில் பார்த்தோம், அவர் பேதுருவை சந்தித்தபோது, அவனுடைய பெயர் என்னவாயிருந்தது என்பதை பேதுருவினிடம் கூறினார். இந்த அடையாளம் பேதுருவுக்கு “உன் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்” என்று வார்த்தை கூறியிருந்தற்கான அவருடைய மேசியாவின் உரிமை கோரிக்கைகளை அடையாளங் காட்டினது. அப்பொழுது சீமோனாயிருந்த பேதுரு வந்தபோது, அவர் இருந்த இடத்திற்கு வந்தபோது, இயேசு அவனைப் பார்த்து, “உன்னுடைய பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரனாயிருக்கிறாய்” என்றார். அது மோசே வாக்குப் பண்ணியிருந்த அந்த வார்த்தையாயிருக்க வேண்டும் என்ற கிறிஸ்துவின் விசேஷ குணத்தை அடையாளங்காட்டினது. அந்த அடையாளம் இயேசுவை மேசியாவாக அடையாளங்காட்டினது என்பதை பேதுரு அடையாளங்கண்டு கொண்டான். “தேவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தார்,” கடைசி நாளுக்கான அபிஷேகம். நாத்தான் வேலுக்கு அவர் சீமோனுக்கு அவருடைய பெயரைக் கூறினார் என்பது நினைவிருக்கட்டும். இப்பொழுது, கவனியுங்கள், அவர் நாத்தான் வேலினிடத்தில், அவன் என்ன செய்திருந்தான் என்பதைக் கூறினார். “நான் உன்னைக் கண்டபோது, நீ மரத்தின் கீழியிருந்தாய்” என்றார். அதுவே அவர் மேசியாயென்பதை அடையாளங்காட்டினது. அப்பொழுது அவன், “நீர் தேவ குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்றான். அவர் மேசியாவாயிருக்க வேண்டும் என்ற வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் விசேஷ குணத்தினால் அவர் அடையாளங்காட்டப்பட்டார். “உன் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்.” கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயினிடத்தில் அவள் என்னவாயிருந்தாள் என்பதை அவர் அவளிடம் கூறினார், அதுவே அவரை இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவாக அடையாளங்காட்டினது. புரிகிறதா? அவருடைய விசேஷ குணம், அவருடைய விசேஷ குணங்கள், அடையாளங்காட்டப்பட்ட வார்த்தையாயிருந்தது. அவருடைய விசேஷ குணங்கள் அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்பதை அடையாளங் காட்டிக் கொண்டிருந்தன. ஆகையால் அது தேவன் கிறிஸ்துவுக்குள் அடையாளங்காட்டப்பட்டதாயிருந்தது. இப்பொழுது அதை கவனியுங்கள். கவனியுங்கள். பேதுருவுக்கு, அவர் பேதுருவினுடைய பெயரை அழைத்ததினால் அவர் அவனுக்கு அடையாளங்காட்டப்பட்டார். நாத்தான்வேல் என்ன செய்திருந்தான் என்பதை அவர் அவனிடத்தில் கூறினதன் மூலம் அவர் அவனுக்கு அடையாளங்காட்டப்பட்டார். சமாரிய ஸ்திரீயாராயிருந்தாள் என்று கூறினதின் மூலம் அவர் அடையாளங்காட்டப்பட்டார். அவன் என்னவென்றும், அவன் யாராயிருந்தான் என்றும்; அவன் என்ன செய்திருந்தான் என்றும், அவள் என்னவாயிருந்தாள் என்றும் கூறினார். அவர் மேசியாவின் விசேஷ குணமாயிருக்க வேண்டியிருந்த அவருடைய மேசியாவின் விசேஷ குணத்தை அடையாளங்காட்டினார். 52அந்த ஸ்திரீ அதேக் காரியத்தைக் கூறுகிறதைப் பாருங்கள். “ஐயா, நீர் ஒரு தீர்க்க்கதரிசி என்று நான் காண்கிறேன். நாங்கள் நூற்றுக்கணக்கான வருடங்களாக ஒரு தீர்க்கதரிசியையும் உடையவர்களாயிருக்கவில்லை. நாங்கள் ஏராளமான சபைகளை, ஏராளமான சண்டைகளையும், ஏராளமான ஸ்தாபன வித்தியாசங்களையும் உடையவர்களாயிருந்து வருகிறோம், ஆனால் நாங்கள் நூற்றுக்கணக்கான வருடங்களாக ஒரு தீர்க்கதரிசியையும் உடையவர்களாயிருக்கவில்லை. மேசியா வரும்போது, இதுதான் அவரை அடையாளங்காட்டும் என்பதை நாங்கள் அறிவோம்” என்று கூறினாள். அவர், “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். “நானே அவர்” என்பதைக் குறித்து எந்த நிச்சயமற்றதுமில்லை . அது அவரை அடையாளங்காட்டினது. பெரும்பாடுள்ள ஸ்திரீயினிடத்தில் அவர் கூறின வார்த்தை அவரை அடையாளங்காட்டினது. எப்படி? அவளுடைய விசுவாசம் அவரைத் தொட்டபோது அவர் செய்ததன் மூலமே. அப்பொழுது அவர் திரும்பி, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். ஏதோக் காரியம் சம்பவித்ததை அவர் அறிந்திருந்தார். அது இயேசுவை மேசியாவாக அடையாளங்காட்டினது. அவள் அதை விசுவாசித்தாள், அவள், “என்னால் அவருடைய வஸ்திரத்தைத் தொட முடிந்தால், அப்பொழுது நான் சொஸ்தமாவேன்” என்று கூறினாள். ஆகையால் அவள் தொட்டவுடனே, அவர் திரும்பி, “இப்பொழுது என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். அவர்கள் எல்லோருமே அதை மறுதலித்தனர். ஆனால் அவருடைய மேசியாவின் விசேஷ குணம். 53ஆமென்! சபையே நீங்கள் அதைப் புரிந்து கொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். நாம் முடிக்கையில் கவனியுங்கள். அவள் அங்கே அவரைத் தொட்டாள். அங்கே ஆயிரக்கணக்கானோர் ஒருகால் அவரைத் தொட முயற்சித்துக் கொண்டிருக்கலாம். பேதுருவும் கூட அவரைக் கடிந்து கொண்டு, “எல்லாருமே உம்மைத் தொட்டு கொண்டிருக்கிறார்களே” என்றான். அதற்கு அவரோ, “ஆம், ஆனால் யாரோ ஒருவர் என்னை வித்தியாசமாகத் தொட்டார்” என்றார். அதுவே அந்த வித்தியாசமான, அந்த விசுவாசத் தொடுதலாயிருந்தது. புரிகிறதா? அவர், “யாரோ என்னைத் தொட்டார்கள். அது ஒரு வித்தியாசமான தொடுதலாயிருந்தது. நான் பலவீனமடைந்துள்ளேன். பெலன் என்னிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. வல்லமை என்னிடத்திலிருந்து சென்றுள்ளது” என்றார். இப்பொழுது அங்கே அவர் நிற்கிறார். இப்பொழுது அவருடைய சொந்த சீஷர்களும்கூட, வேறு வார்த்தைகளில் கூறினால், “நீர் ஏதோ ஒரு குற்றவாளியான நபரைப் போலத் தென்படுகிறீர். காரணம், ஜனங்கள் ஒவ்வொருவரும் உம்மைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்களே” என்றனர். அவருடைய, அவருடைய அடையாளத்தை இப்பொழுது கவனியுங்கள். அவர் திரும்பி கூட்டத்தினூடாக நோக்கிப் பார்த்தார். அவர் அவனை சரியாக தனித்திருக்கக் கண்டார். அவளால் அதிக நேரம் மறைந்திருக்க முடியவில்லை . அப்பொழுது அவர் அவளுடைய நிலையை அவளிடத்தில் கூறினார். மேலும், “அவளுடைய விசுவாசம் அவளை இரட்சித்தது” என்றார். அவள் இதன் மூலமே அறிந்து கொண்டாள். அதாவது, எபிரெயர் 4:12, “தேவனுடைய வார்த்தையானது இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாயுள்ளது” என்று உரைக்கிறது. அவருடைய விசேஷ குணம், “தேவனுடைய வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்” என்றே அவரை அடையாளங்காட்டினது. ஆமென். இன்றிரவு அதேக் காரியம் அவரை, இன்றிரவு நமக்கு மத்தியில் ஜீவிக்கிற உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராக அடையாளங்காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, எபிரெயர் 13:8 உண்மையாயிருக்கிறது போன்றே, அவருடைய விசேஷ குணம் இன்றைக்கு அவரை அப்பொழுது அது அடையாளங்காட்டினது போன்ற அதே முறையில் அவரை அடையாளங்காட்டும். 54உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கிலேயோப்பாவையும் மற்றவர்களையும் பாருங்கள். இயேசு அந்த அப்பத்தைப் பிட்டு, அதாவது அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் அவர் அதை செய்தவிதமாகவேச் செய்து தம்மை அதேவிதமாகவே அடையாளங்காட்டினார். அவர்கள்...அது அவருடைய விசேஷ குணத்தை அடையாளங்காட்டினது, ஏனென்றால் அந்தவிதமாக அவர் அதைச் செய்தார். இப்பொழுது அவர் இன்றிரவு இங்கே இருப்பாரானால், அவர் தம்மை எப்படி அடையாளங்காட்டுவார்? அவர் நேற்று செய்தது போலவே, ஏனென்றால் அவர் இன்றைக்கும் அதேவிதமாக இருக்கிறார், என்றென்றைக்கும் அதேவிதமாக இருப்பார். அதுவே அடையாளமாயுள்ளது. எபிரெயர் 4, நான்கு...14 மற்றும் 15, “ஆவர் இப்பொழுது இருக்கிறார்...” என்று கூறுகிறார், அதாவது, “அவர், நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராய் நமக்கிருக்கிறார்” என்று கூறுகிறது. அவர் இப்பொழுது நம்முடைய பிரதான ஆசாரியராயிருக்கிறார். அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அவருடைய மரணத்திற்குப் பிறகு, அவருடைய அடக்கத்திற்குப் பிறகு, அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவருடைய பரமேறுதலுக்குப் பிறகு, ஆமென், அவர் இன்னமும் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய், நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராய் இருக்கிறார். ஆமென். அவர் அதை இங்கே விசுவாசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், ஸ்திரீக்கும் இப்பொழுதே இங்கிருக்கிறார். அவர் நம்முடைய பிரதான ஆசாரியராய், நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் சதாக்காலமும் உயிரோடிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்.ஆசி] அவருடைய விசேஷ குணங்கள் அவர் பூமியின் மேல் ஜீவித்தபோது அவர் இருந்தவிதமாகவே அவரைத் தொடர்ந்து அடையாளங்காட்டுகிறது. அவர் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இன்றிரவு இங்கே இன்னும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார். அவர் சதாக்காலமும் உயிரோடிருக்கிறார். அவருடைய விசேஷ குணங்கள், அவர் இன்னமும் உயிரோடிருந்து கொண்டிருந்தால் அது எப்பொழுதும் செய்ததுபோல அவரைப் பின் தொடரும். நான், “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன் இந்தக் கடைசி நாட்களில் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்து மூலமாய்த் திருவுளம் பற்றினார்” என்பதற்கு இன்றிரவு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 55என்னே, நான் நீண்ட நேரம் பேசிவிட்டதை அறியவில்லை. நான் அந்தவிதமாக நேரம் கடந்ததைக் குறித்து மறந்துவிட்டேன். நான் அதற்காக வருந்துகிறேன். நான்... நான் முடித்து விடுவேன். நாம் ஜெபம் செய்வோமாக. பரலோகப் பிதாவே, மகத்தான இரக்கமுள்ள தேவனே! கர்த்தாவே, நான் - நான்... ஒருகால் நான் அளவுக்கதிகமாக பேசியிருக்கலாம். தேவனே நான் அவ்வாறு பேசியிருந்தால், நீர் என்னை மன்னிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆனால் கர்த்தாவே, நான் கூறினவற்றிற்காக என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. நீர் இங்கே உம்முடைய வார்த்தையில் கூறியிருக்கிறதையே நான் அப்படியேக் கூறினேன். இப்பொழுது ஒரு வார்த்தை அல்லது இரண்டு உம்மிடத்திலிருந்து வருவதாக, கர்த்தாவே, அதை இங்குள்ள ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்களாக். நீர் இன்னமும் எங்களுடைய மகத்தான பிரதான ஆசாரியராய் இருக்கிறீர் என்பதை அவர்கள் காணும்போது இந்த சுகவீனமான சிறுகூட்ட ஜனங்கள் சுகமடைவார்களாக. கர்த்தாவே, இந்த அடுத்த சில நிமிடங்களில் நீர் இந்த செய்தியை மீண்டும் உண்மையாய் ஜீவிக்கச் செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். வார்த்தையின் மூலமாக நான் கூறியுள்ளதற்கு உம்முடைய விசேஷ குணம் நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்பதையும், நீர் எங்கள் மத்தியில் இருப்பதையும் அடையாளங்காட்டுவதாக, ஏனென்றால், நாங்கள் அதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 56இப்பொழுது அப்படியே சற்று நேரம் இருங்கள். நாம், நான்நான் சற்று தாமதமாக்கிவிட்டேன், ஆனால் நீங்கள் எல்லோருமே ஒரு சிறு ஜெப வரிசைக்காக பதினைந்து, இருபது நிமிடங்கள் பொருத்துக் கொள்வீர்களா? நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “நாம்...” என்று கூறுங்கள், சரி, உங்களுக்கு நன்றி- நன்றி. நான் உங்களை ஒன்பது-முப்பது மணிக்கு அனுப்புவதாக வாக்களித்தேன். இப்பொழுது அந்த நேரத்திற்கு இன்னும் இருபது நிமிடங்கள் உள்ளன. ஆகையால் நீங்கள் எனக்கு கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அளித்தால், நான் துரிதமாக முடித்துவிடுவேன். இன்றைக்கு என்ன எழுத்திட்ட ஜெப அட்டைகளை அவர்கள் வெளியே கொடுத்துள்ளனர் என்பதை நாம் பார்ப்போமா? (ஒரு சகோதரன், “O” என்று கூறுகிறார். ஆசி.] 0-என்ற எழுத்து உள்ளதா? என்ன, நாம் அன்றொரு இரவு எங்கிருந்து துவங்கினோம், ஒன்று, ஒன்றிலிருந்தா? [“அது ஒன்று என்ற எண்ணாயிருந்தது என்றே நான் கருதுகிறேன்”) ஆம், உ-ஊ. 57அதன்பின்னர் நாம், கடந்த இரவு, நாம்...பரிசுத்த ஆவி... நான் இன்றைக்கு நேற்று பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாவில் என்னக் கூறப்பட்டது என்பதை திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவைகளில் சில பிரெஞ்சு பெயர்கள், நான்...பரிசுத்த ஆவியானவர்; நான் அதைச் செய்யக் கூடிய ஒரே வழி, அப்படியே காத்திருந்து பார்ப்பதாகும். பாருங்கள், சில சமயங்களில் நீங்கள் ஒரு தரிசனத்தைக் காணும்போது, அது திரும்பக் கூறி, மொழிபெயர்க்கப்பட வேண்டியதாயுள்ளது. அது வியாக்கியானிக்கப்படுகிறது. ஒரு தரிசனம், நீங்கள் நீங்கள் ஒரு ஒரு ஆட்டைக் காண்பது போல, அது உரோமத்தைப் பொருட்படுத்தலாம். பாருங்கள், நீங்கள் அதைக் குறித்த மொழிப் பெயர்ப்பையும் கூட பெற்றுக் கொள்ள வேண்டும், பாருங்கள், அந்த தரிசனம் திருப்பி மொழிபெயர்க்கப்படுகிறது. என்னால் என்னால் அந்த பிரெஞ்சு பெயர்களை உச்சரிக்க முடியாமற்போனதை நான் கடந்த இரவு கவனித்தேன், நான் அதை எழுத்துக் கூட்டி கூற வேண்டியதாயிருந்தது. ஆப்பிரிக்காவில் சுற்றிலும் உள்ள அந்த நாகரீகமற்ற படிப்பறிவில்லாத மேய்ப்பர்கள், அஞ்ஞானிகள் மற்றுமுள்ள காரியங்கள், அவர்களுடைய பெயர் ஒவ்வொரு எழுத்தாகக் கூற வேண்டும், அவர்கள் யாராயிருந்தனர் என்று அவர்களிடம் கூறி அவர்களுடைய மொழியில் அதை சரியாக எழுத்துக் கூட்டிக் கூற வேண்டியதாயிருந்தது. நீங்கள் அதை எழுத்துக் கூட்டி கூறினவுடனே, அது என்னவாயிருந்தது என்பதை அவர்கள் - அவர்கள் அறிந்து கொள்வார்கள். ஆனால், பாருங்கள், ஆனால் அவர் எல்லா மொழிகளையும் அறிந்திருக்கிறார். அவர் நித்திய தேவனாயிருக்கிறார். 58நாம் இன்றிரவு 0-என்ற எழுத்தில் உள்ள எண் எழுபத்தைந்திலிருந்து துவங்கி நூறு வரை அழைப்போமாக. 0தானே, அதைத்தானே அவர் கூறினார்? நான்...[ஒரு சகோதரன், “ஆம், 0 என்ற எழுத்து” என்று கூறுகிறார்) 0- என்ற, O- என்ற எழுத்து, ஆம். சரி. ஜெப அட்டை எண் எழுபத்தைந்தை வைத்திருக்கிறது யார், நாம் அதைப் பார்ப்போமாக? 0-என்ற எழுத்தில் உள்ளது, ஜெப அட்டை 0, எழுபத்தைந்து என்ற எண்ணை வைத்திருப்பவர், யார் அதை வைத்திருந்தாலும் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். O- என்பது, சரி. சரி இங்கு வாருங்கள். எழுபத்தைந்து, எண்பது, எண்பதைந்து, தொண்ணூறு, தொண்ணூற்றைந்து, நூறு, நீங்கள் விரும்பினால் இந்த வழியாக வாருங்கள். சரி. அதை சரியாக உடனே இங்கிருந்து வரிசைப்படுத்துங்கள், ஏனென்றால் நமக்கு நேரம் இல்லை. நீங்கள் அந்த வரிசையை ஏற்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களுடைய ஜெப அட்டையை நோக்கிப் பாருங்கள். உங்களுக்கு பக்கத்தில் உள்ளவருடைய ஜெப அட்டையையும் நோக்கிப் பாருங்கள். என்ன ஒரு...யாராவது முடமாயிருந்தால், அவர்களை இங்கே ஜெபவரிசைக்கு அழைத்து வாருங்கள். அவர்கள் 0- என்ற எழுத்தில் உள்ள ஜெப அட்டையை வைத்திருந்தால், 0என்ற எழுத்தில் எழுபத்தைந்திலிருந்து... உள்ள ஜெப அட்டையை வைத்திருந்தால்... நீங்கள் விரும்பினால் எழுபத்தைந்திலிருந்து நூறுவரை இங்கு வரிசைப்படுத்துங்கள். மாடியின் முகப்பில் நீங்கள் எங்கேயிருந்தாலும், எங்கேயிருந்தாலும் இறங்கி வாருங்கள். நீங்கள் விரும்பினால் நேரத்தை மிச்சப்படுத்த முடிந்தளவு துரிதமாக வரிசையண்டை வாருங்கள். இப்பொழுது இங்கே உள்ளே மற்றவர்கள், ஒரு ஜெப அட்டையை வைத்திராதவர்கள், நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், நான் ஒரு ஜெப அட்டையை வைத்திருக்கவில்லை, ஆனால் நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுவீர்களா? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். 59இப்பொழுது நினைவிருக்கட்டும், நான் இப்பொழுது பிரதான ஆசாரியரைக் குறித்துப் பேசப் போகிறேன். “அவர் நம்முடைய பலவீனங்களை குறித்துப் பரிதபிக்கக் கூடிய ஒரு பிரதான ஆசாரியராய் இருக்கிறார்.” அவர் யோவாவா யீரே, “கர்த்தரால் அருளப்பட்ட பலி.” அவர் யேகோவா- ரப்பா, “உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர்.” நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.] அவர் யேகோவாமானாசே. ஒரு பரிசையும், ஒரு கேடகமும், நம்முடைய சமாதானமுமாயிருக்கிறார், அவர் இன்னமும் அவ்வாறே இருக்கிறார். அந்த எல்லா மீட்பின் நாமங்களும் இயேசுவுக்கு உபயோகிக்கப்பட்டன என்பதை எத்தனைபேர் விசுவாசிக்கிறீர்கள்? (“ஆமென்.”-ஆசி.) நிச்சயமாகவே, அவர் அவ்வாறெல்லாம் இருக்க வேண்டியவராயிருந்தார். அவர் அவர். காரணம் அவைகள் பிரிக்க முடியாதவைகளாயுள்ளன, ஆகையால் அவர் அவைகள் எல்லாவற்றையும் உடையவராயிருக்க வேண்டியதாயிருந்தது. அவர் இன்னமும் யோகோவாயீரேவாக இருக்கிறார், அவர் யேகோவா - ரப்பாவாக இருக்கிறார். அவர் யேகோவாயீரேவாக இருப்பாரானால், அவர் யேகோவாயீரேவாக, “இரட்சிப்பிற்காக கர்த்தரால் அருளப்பட்ட பலியாக இருக்கிறார்,” அதன்பின்ன அவர் யேகோவா - ரப்பாவாக, அதாவது “நம்முடைய நோய்களையெல்லாம் குணப்படுத்துகிறவராக” இருக்கிறார். ஆமென். சுகமளித்தல் தேவனால் மாத்திரமே உண்டாக முடியும். 60சரி, ஜனங்கள் வரிசையில் வருகையில், அவர்கள் யார் என்றும், அவர்கள் என்னவாயிருக்கிறார்கள் என்றும் பார்ப்பதற்கு எனக்கு நேரமிருக்கவில்லை. ஆனால் இப்பொழுது, அங்கே வெளியில் உள்ள நீங்கள் எல்லோருமே நான் உங்களை அறியேன் என்பதை அறிந்துள்ளவர்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “எனக்கு தேவனிடத்தில் ஒரு தேவை உண்டு. ஆனால் சகோதரன் பிரான்ஹாம் நீர் என்னை அறிந்திருக்கவில்லை, ஆனால் எனக்கு தேவனிடத்தில் ஒரு தேவை உண்டு. நான் என்னுடைய கரத்தை உயர்த்தப் போகிறேன்” என்று கூறுங்கள். இப்பொழுது நீங்கள் சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தால் நலமாயிருக்கும், கவனியுங்கள், கவனமாயிருங்கள், அமைதியாயிருங்கள். இப்பொழுது நான், “அமைதியாயிருங்கள்”...என்று கூறும்போது, அமைதியாயிருப்பதை நான் பொருட்படுத்திக் கூறவில்லை. கர்த்தர் எந்தக் காரியத்தையாவது செய்தால், நீங்கள் கர்த்தரைத் துதிக்க விரும்பினால், அதுவே ஆராதனை. ஆனால் நான் என்னக் கூறுகிறேனென்றால், “அப்படியே சுற்றி ஓடுவது, எழுந்திருப்பது,” அது பயபக்தியற்றத் தன்மையாயிருப்பதை நீங்களே அறிவீர்கள். புரிகிறதா? பரிசுத்த ஆவியானவர் மிகவும் வெட்கி ஒதுங்கும், மிகவும் வெட்கி விலகிவிடும் சுபாவமுள்ளவராயிருக்கிறார். புரிகிறதா? அதைப் போன்ற ஏதாவது காரியம் நடந்தால், அவர் என்னை விட்டுச் சென்று விடுகிறார், அதன்பின்னர் நான் மீண்டும் அவர் என்னண்டை வர போராட வேண்டும், பாருங்கள். ஆனால் நீங்கள் கவனிப்பீர்களேயானால் நலமாயிருக்குமே! 61அவருடைய முதல் வாக்குத்தத்தம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? “ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படிச் செய்தால், அப்பொழுது உத்தமமாயிருந்தால், அந்த ஜெபத்திற்கு முன்னால் ஒன்றுமே நிற்காது.” உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? (சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] அது உண்மை . அது... அது இதுவரை தவறிப்போனதை நான் கண்டதேயில்லை, அது தவறிப்போகாது. அது தேவனாயுள்ளது. இப்பொழுது நாம் ஜெப வரிசையை துரிதமாக அமைத்து ஆரம்பிப்போம், அதனால் ஜனங்களின் நிமித்தமாக நாம் முடிந்தளவு அதிகம் பேருக்கு ஜெபிக்கலாம். ஆனால் ஜெப அட்டைகளை வைத்துள்ள நீங்கள் இன்றிரவு அழைக்கப்படவில்லையென்றால், உங்களுடைய அட்டையை அப்படியே வைத்திருங்கள், நாங்கள் உங்களை அழைக்கப் போகிறோம். சரி. 62இப்பொழுது அங்கே ஜெப அட்டைகளில்லாமல் வெளியிலிருக்கிற நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அங்கே வெளியே உள்ள நீங்கள் ஜெப அட்டைகளை வைத்திருந்தாலும் அல்லது இல்லையென்றாலும், அவர் எபிரெயர் 4-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளபடி இங்கிருக்கிறார் என்பதை விசுவாசியுங்கள். “அவர் நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராய் இருக்கிறார்.” அவர் அவ்வாறே தொடர்ந்து இருக்கிறாரா என்று பாருங்கள். அவர் சோதோமின் நாட்களில் செய்ததுபோல யேகோவா தம்மை தம்முடைய ஜனங்களுக்கு மத்தியில் செயல்படுத்திக் காட்டியிருக்கிறாரா என்று பாருங்கள். சரி. சரி, ஐயா, இப்பொழுது நாம் ஜெபம் செய்வோம், இப்பொழுது உண்மையாகவே பயபக்தியாயிருப்போம். இப்பொழுது எவரேனும் கூற முடிந்த வார்த்தைகளைப் பார்க்கிலும் தேவனிடத்திலிருந்து வரும் ஒரு வார்த்தையே போதுமானது என்பது நினைவிருக்கட்டும். இப்பொழுது, இந்த மனிதன் இங்கிருக்கிறார், நான் - நான் அவரை அறியேன். நான் யூகிக்கிறேன் அவர்... நீங்கள் எனக்கு ஒரு அந்நியராயிருக்கிறீர்கள், ஐயா, நீங்கள் அந்நியர்தானே? (அந்த சகோதரன், “ஆம்” என்கிறார்.-ஆசி.) நீர் ஒரு அந்நியராயிருக்கிறீர். என்றோ ஒரு நாள் நாம் இருவரும் தேவனுடைய சமூகத்தில் நிற்க வேண்டியவர்களாயிருக்கிறோம் என்ற ஒரு காரியத்தை நாம் அறிவோம்; மனிதன் என்ற காரணத்தால், நாம் அங்கே சந்திக்க வேண்டும். இது நம்முடைய முதல் முறையான சந்திப்பாயுள்ளது. இப்பொழுது நீங்கள் இங்கு வந்திருந்தால், நீங்கள் சகவீனமாயிருந்தால், எனக்குத் தெரியாது; அது வேறெதோ ஒரு காரியமாய் இருக்கலாம், பாருங்கள். ஆனால் நான்-நான் உங்கள் மேல் கரங்களை வைத்து, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! போய், சுகமடையுங்கள்” என்று கூறினால் நலமாயிருக்கும். அது சரி. உங்களால் அதை நம்பக் கூடும். ஆனால் உங்களோடுள்ள கோளாறு என்ன என்பதை அவர் கூறுவாரானால் என்னவாகும்? இப்பொழுது பாருங்கள். அது வித்தியாசமானது, அப்பொழுது அது அவருடைய விசேஷ குணத்தை அடையாளங்காட்டுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள், அது என்னுடைய விசேஷ குணமாயிருக்காது. நான் ஒரு மனிதனாயிருக்கிறேன்; எனக்கு அவரைக் குறித்து ஒன்றுமே தெரியாது. நான் அவரிடத்தில், “எனக்கு உங்களைத் தெரியாது” என்று அவரிடத்தில் கூறினேன். அவருக்கும் என்னைத் தெரியாது. ஆனால் அது என்னச் செய்யும்? அது நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவின் விசேஷத் தன்மையை அடையாளங்காட்டும். அது நானாக இருக்க முடியாது, நானாக இருக்கவே முடியாது, ஏனென்றால் நான் அந்த மனிதனை அறியேன். நான் என் கரத்தை உயர்த்துவேன்; இங்கே வார்த்தை உள்ளது. புரிகிறதா? எனக்கு அவரைத் தெரியாது. அவருக்கும் என்னைத் தெரியாது. ஆனால் அது இயேசு கிறிஸ்துவின் விசேஷ குணம்... 63இயேசு இங்கே நின்று கொண்டிருந்து, இவர் சுகவீனமாயிருந்தால், அப்பொழுது இவர், “கர்த்தராகிய இயேசுவே என்னைக் குணப்படுத்தும்” என்று கூறினால், அப்பொழுது இயேசு அவருக்கு என்னக் கூறுவார்? “நான் அதை ஏற்கெனவே செய்து விட்டேன்” என்பார். அது சரிதானே? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்.- ஆசி.) “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.” நாம் பெற்றுக் கொள்ளக் கூடிய எல்லா மீட்பும் கல்வாரியில் தீர்த்து வைக்கப்பட்டாயிற்று. அங்கிருந்து, அது முடிவுபெற்ற கிரியையை விசுவாசிக்கும்படியான் விசுவாசமாய் உள்ளது. அது சரியா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்-ஆசி.) சரி. இப்பொழுது, இப்பொழுது இயேசு உயிரோடிருப்பாரானால், நான் அவருடைய வார்த்தைக் குறித்து பேசியிருக்கிறேன்.... அங்குதான் உங்கள் காரியமே உள்ளது, அந்த எளிமைக்கு திரும்பி, விசுவாசியுங்கள், அவருடைய வார்த்தையை விசுவாசியுங்கள். அவர் அந்த இரவு என்னை சந்தித்தபோது, அவர், “அவர்களுடைய இருதயத்தின் இரகசியங்களை நீ அறிந்து கொள்வதும் கூட உன்னிடத்தில் நிறைவேறும். கரம்பிடித்து வியாதியை கண்டறியும் முதல் அடையாளத்தை அவர்கள் விசுவாசிக்கவில்லையென்றால், அப்பொழுது அவர்கள் இந்த ஒன்றை விசுவாசிக்க வேண்டும். புரிகிறதா? அவர்கள் அதைச் செய்யவில்லையென்றால், அப்பொழுது இரத்தமானது பூமியை சபிக்கிறது” என்றார். மோசேயின் காலத்தில் அது செய்ததுபோலவே இருக்கும். மேலும், “அந்த இரண்டு அடையாளங்களையும் விசுவாசிக்கவில்லையென்றால், அப்பொழுது பூமியின் மேல் இரத்தம் ஊற்றப்படும். பாருங்கள். பூமியின் மேல் தண்ணீரை ஊற்று, அது இரத்தமாகும்.” 64இப்பொழுது அதைக் கண்டறிவோம். உங்களுடைய தொல்லை என்னவென்பதை என்னால் அப்படியே காணக் கூடுமானால், அப்பொழுது அது உங்களை திருப்திபடுத்தி விசுவாசிக்கச் செய்யும், அது அவ்வாறு செய்யுமா? [அந்த சகோதரன், “நிச்சயமாக” என்று கூறுகிறார்.—ஆசி.) அது நான் பேசிக் கொண்டிருக்கிற நபரான இயேசு கிறிஸ்துவைக் குறித்த விசேஷ குணமாயிருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த மனிதனை, நான் அவரை நோக்கிப் பார்த்தபோது, அவர் பின்னால் செல்கிறார். அவர் நிழலிடப்பட்டிருக்கிறார். அந்த மனிதனுக்கு உதவி செய்யக் கூடிய மருந்து என்ற ஒரு காரியமும் இல்லை. அவர் ஒரு மரித்துக் கொண்டிருக்கிற நிலையில் இருக்கிறார். அது உண்மை . அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்துள்ளது, அந்த அறுவை சிகிச்சை ஒரு பெருஞ்சுரப்பி சம்மந்தமான அறுவை சிகிச்சையாகும். அது புற்று நோயாகிவிட்டது, அந்தப் புற்று நோய் உங்களுக்கு எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. அது உண்மையானால் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். தேவன் மாத்திரமே அவரை குணப்படுத்த முடியும். (அந்த சகோதரன், “அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!” என்று கூறுகிறார். ஆசி.) ஆனால் பாருங்கள், ஐயா, நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். அந்தப் பிசாசு அந்த மருத்துவருடைய கத்திக்கு மறைந்திருக்கலாம், ஆனால் அவனால் தேவனிடத்திலிருந்து மறைய முடியாது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? (“ஓ! ஓ!”] ஆகையால் அந்தக் காரியம் அவரிடத்திலிருந்து நீங்கி, அந்த மனிதன் ஜீவிக்கும்படி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதற்கு ஜெபிக்கிறேன். வேறு ஒன்றுமேயில்லை, பலவீனமடைந்துள்ளார். சரி. 65நீங்களும் நானும் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம், ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் சந்திருக்கிறார்கள். இப்பொழுது ஒரு மனிதன் என்ற முறையில் நான் உங்களை அறியேன். ஒரு வேளை ஒரு ஸ்திரீ என்ற முறையில் நீங்களும் என்னை அறியீர்கள்; நீங்கள் என் பெயரை அல்லது புகைப்படத்தை அல்லது அது போன்ற ஒன்றைக் கண்டது இல்லை. ஆனால் நாம் ஒருவரையொருவர் அறியோம். அதுவே நம்முடைய விசேஷ குணங்கள். நாம் ஒருவருக்கொருவருடைய விசேஷ குணத்தை அறியோம். ஆனால் கிறிஸ்துவின் விசேஷ குணம், அவர் வார்த்தையாயிருக்கிறார், வார்த்தை இந்த நாளுக்காக வாக்களிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதைக் குறித்து நான் பேசுவதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆகையால் அவருடைய விசேஷ குணங்கள் அவரை இங்கே அடையாளங்காட்டும். நான் அவரை அடையாளங்காட்டுவது அல்ல. நான் உங்களை அறியேன். நீங்கள் அதை புரிந்து கொள்கிறீர்கள். நம்முடைய-நம்முடைய சபை அதை புரிந்துகொள்கிறதா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.) புரிகிறதா? நான் நான் ஒரு மனிதன். நான் உங்களுடைய சகோதரன். கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயினிடத்தில் தவறாயிருந்த ஒரு காரியத்தைக் கூறியதுபோல, உங்களோடு ஒரு காரியம் தவறாய் உள்ளது என்றோ அல்லது உங்களுக்கு என்ன வேண்டும் என்றோ அல்லது நீங்கள் இங்கே எதற்காக இருக்கிறீர்கள் என்றோ கூறுவதாகும். தேவனே அதனுடைய நியாயாதிபதியாயிருக்கட்டும். நீங்கள் இரத்த சோகை நிலைமையினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை , இல்லையா? (அந்த சகோதரி, “ஆம்” என்கிறாள்.-ஆசி.] நான்- நான் தொடர்ந்து அதை உணருகிறேன், அதாவது நான் அதை யூகித்துக் கூறினேன் என்று யாரோ ஒருவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். நான் அதை யூகிக்கவில்லை. இல்லை. எப்பொழுதாவது ஒரு முறை நான் அது யாரோ ஒருவர் என்பதை உணருகிறேன். நீங்கள் இப்பொழுது உங்களுடைய சிந்தனைகளை மறைக்க முடியாது. இப்பொழுது அதைக் குறித்துக் காரியமோ, உண்மையாகவே இரண்டு மோசமான சந்தேகக்காரர்கள் இங்கே அமர்ந்திருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். பார்த்தீர்களா? ஆகையால் இப்பொழுதே என்னால் உங்களுடைய பெயரையும் கூட அழைக்க முடியும் என்பது நினைவிருக்கட்டும், தேவனால் அதைக் கூறிட முடியும், ஆகையால் நீங்கள் அவ்வாறு சிந்திப்பதை விட்டுவிடுங்கள். நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும். பெண்மணியே, இங்கே பாருங்கள். என்னை நோக்கிப் பாருங்கள். அவர் உங்களுக்கு என்ன கூறினார் என்பதை நான் அறியேன், ஆனால் அவர் என்னவாயிருக்கிறார் என்பதை நான்நான் அறிவேன். அதுவே அவருடைய விசேஷ குணத்தை அடையாளங்காட்டினது. ஆம், அது இரத்த சோகை நிலைமை, இரத்தம், தண்ணீர். இப்பொழுது இங்கே, இங்கே ஒரு காரியம் உள்ளது. இது யூகித்தல் என்று அவர்கள் நினைக்கிறார்களா என்று பாருங்கள். இங்கு நீ வைத்துள்ள ஒரு குழந்தைக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். (அந்த சகோதரி, “ஆம்” என்று கூறுகிறாள்.- ஆசி.) அது உண்மை . அது அதனுடைய தொண்டையில் உள்ளது. (“ஆம்”), உள் நாக்குச் சதை வளர்ச்சி மூக்கடி சுரப்பி வீக்கம். அது ஒரு அறுவை சிகிச்சைக்காக உள்ளது. இல்லையா? [“ஆம்”) அந்தக் கைக்குட்டையைக் கொண்டு போய், அதன்மேல் வைத்து விசுவாசி. (“ஆம்”] சந்தேகப்படாதே. அதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது. இப்பொழுது உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 66நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? இங்கு இந்த ஸ்திரீக்கான காரியமாயுள்ளது, அதாவது நீங்கள் ஒரு காரியத்தைக் குறித்து பயமடைந்திருக்கிறீர்கள். பிறக்கும்போது உடலில் காணப்படும் தனிப்பட்ட ஒரு அடையாளம் புற்று நோயாக மாறியுள்ளது என்பதற்காக நீங்கள் பயமடைந்திருக்கிறீர்கள். (அந்த சகோதரி, “ஓ!” என்று கதறுகிறாள்.-ஆசி.] இப்பொழுது போய், விசுவாசியுங்கள், அது அந்த விதமாக இருக்காது. போய், உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். விசேஷ குணங்கள், என்னுடையதல்ல; அவருடையதே! நீங்கள் இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.) அது ஒவ்வொருவரையும் விசுவாசிக்கச் செய்ய வேண்டும். (“ஆமென்”) இப்பொழுது, நான் உங்களை அறியேன். நான் உனக்கு ஒரு அந்நியனாயிருக்கிறேன். தேவன் உங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? எனக்கு உங்களைத் தெரியாது என்பதை நீங்கள் அறிவீர்கள், உங்களுக்கு என்னைத் தெரியாது என்பதையும் நீங்கள் அறிவீர்கள், ஆகையால் பேசிக் கொண்டிருக்கிற இந்த ஆவி என்னுடைய ஆவியாயிருக்க முடியாது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? காரணம், நான் ஒரு மனிதனாயிருக்கிறபடியால், நான் உங்களை அறியேன். ஆனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் விசேஷ குணம் இரு புறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிற வார்த்தையாய் உள்ளது. நீங்கள் மிகவும் சுகவீனமாயிருக்கிறீர்கள். உங்களுக்கு ஸ்திரீகளுக்கான தொல்லை இருந்தது, அது கருப்பையில் இருந்தது, அந்த கருப்பையில் புற்றுநோய் இருந்தது. நீங்கள் போய், ஏதோ ஒருவிதமான ஒரு சிகிச்சையை எடுத்துக் கொண்டீர்கள், அது ஒரு கதிரியக்கச் சிகிச்சையாயிருந்தது, அந்த சிகிச்சை செய்த ஒரேக் காரியம் அந்தப் புற்று நோயினை உங்களுக்குள் முழுவதுமாக சிதறி பரவச் செய்து விட்டது. தேவன் உங்களை குணப்படுத்தவில்லையென்றால் நீங்கள் நீங்கள் மரித்துப் போவீர்கள். அது உண்மை . அவர் உங்களை குணமாக்குவார் என்று இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (அந்த சகோதரி, “ஆம்” என்று கூறுகிறார்.-ஆசி.] மருத்துவரிடத்திலிருந்து மறைந்திருக்கிற அந்த பிசாசை பரலோகத்தின் தேவன் தாமே கடிந்து கொள்வாராக. (“ஓ!”) அவன் கதிரியக்கத்திலிருந்து மறைந்திருக்கலாம், ஆனால் பரிசுத்த ஆவியினிடத்திலிருந்து மறைந்திருக்க முடியாது. சகோதரியே போய், இப்பொழுது அவரை விசுவாசியுங்கள். சந்தேகப்படாமல் விசுவாசியுங்கள். (“ஓ தேவனே, என்னைக் குணப்படுத்துமே!”] 67தேவனால் அந்த காச நோயின் நிலைமையிலிருந்து குணப்படுத்த முடியும் என்றும், உங்களை குணப்படுத்த முடியும் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரனே, “ஆம்” என்கிறார் - ஆசி.] நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்களுடைய பாதையில் களிகூர்ந்து கொண்டே சென்றுகொண்டு, “கர்த்தாவே, உமக்கு நன்றி. என்னுடைய காசநோய் முற்று பெற்றுவிட்டது” என்று கூறுங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் நரம்புணர்வு பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறீர்கள். நீங்கள் நீண்ட காலமே நரம்புணர்வினால், பாதிப்படைந்தவராயிருந்து வருகிறீர்கள். அங்கே அது உங்களுடைய வயிறில் ஒரு சீழ்வடியும் புண் உண்டாக காரணமாயிருந்தது, அதுவே உங்களுடைய உங்களுடைய வயிற்றில் உங்களுக்கு தொல்லையை உண்டாக்குகிறது. நீங்கள் விரும்புவது... நீங்கள் உங்களுடைய இரவு உணவினைப் புசிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் என்ன செய்யும்படி நான் உங்களுக்குக் கூறினாலும் நீங்கள் செய்வீர்களா? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் போய்ப் புசியுங்கள். நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரியோ, “நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுகிறாள்.-ஆசி) நீங்கள் ஒரு வலிமையான-அருமையான வாலிபப் பெண்மணியைப் போன்றிருப்பதாக காணப்படுகிறீர்கள். நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரரென்று விசுவாசிக்கிறீர்களா? (“ஆமென்.”] அவருடைய விசேஷ குணம் இங்கே இருக்கக் கூடும் என்றும், “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்” என்ற இந்த நாளின் வாக்குத்ததமான வார்த்தை தாமே இங்கு உள்ளது என்பதையும் கூட நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [“ஆமென்.”) என்னால் சுகப்படுத்த முடியாது. அவர் அதை ஏற்கெனவே செய்துள்ளார்; ஆனால் அவருடைய விசேஷ குணம் அவரைக் காட்சிக்குரியதாக்கி, உங்களோடு உள்ள கோளாறு என்ன என்பதையும் கூற முடியும். உங்களுக்கு ஒரு ஸ்திரீகளுக்கான தொல்லை, ஸ்திரீகளுக்கான தொல்லை உள்ளது. (“ஆம் ஐயா.”) தேவன் அதை இப்பொழுதே குணப்படுத்துகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ('ஆம். ஆமென்“) உங்களுடைய பாதையில் செல்லுங்கள், அது உங்களை இனிமேல் தொந்தரவு செய்யாது. உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 68நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? (அந்த சகோதரியோ, 'ஆம் ஐயா“ என்கிறார்.ஆசி.) உங்களுடைய தொல்லை என்னவென்பதை தேவன் என்னிடத்தில் கூறினால், அது இயேசு கிறிஸ்துவின் விசேஷ குணம் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? அது உங்களுடைய முதுகில் உள்ளது. அது இனிமேல் இருக்காது. போய், உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். விசுவாசியுங்கள். வாருங்கள், பெண்மணியே, உங்களுக்கும் கூட வயிற்றுத் தொல்லை உண்டு. உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்து, போய் உங்களுடைய இரவு ஆகாரத்தைப் புசியுங்கள். அதைக் குறித்து மறந்துவிடுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை குணமாக்குகிறார். வாருங்கள். உங்களுடைய தொல்லை உங்களுடைய இரத்தத்தில் உள்ளது. நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளி. தேவன் உங்களை குணமாக்குவார் என்றும், அதிலிருந்து உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய பாதையில் சென்று கொண்டே, “கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி” என்று கூறுங்கள், அவர் உங்களை சுகப்படுத்துகிறார். போய், உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். வாருங்கள். உங்களுடைய முதுகு, தேவன் உங்களுடைய முதுகை சுகப்படுத்தி, உங்களை குணமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய பாதையில் களிகூர்ந்து கொண்டே சென்று, “கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி” என்று கூறுங்கள். உங்களுக்கும் கூட உங்களுடைய முதுகில் ஏதோ ஒரு கோளாறு இருந்தது. அப்படியே தொடர்ந்து நடந்துகொண்டே, “கர்த்தாவே, உமக்கு நன்றி. நான் குணமடைந்துவிட்டேன்” என்று கூறுங்கள். அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். உங்களுக்கும் கூட முதுகுத் தொல்லை இருந்தது. அதைக் குறித்து நீங்கள் என்ன அறிந்து கொள்ளுகிறீர்கள்? இப்பொழுது உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள், உங்களுடைய பாதையிலே செல்லுங்கள், சுகமடைவீர்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார் என்று விசுவாசியுங்கள். “நீ விசுவாசிக்கக் கூடுமானால், எல்லாம் கூடும்.” சரி. 69நான் உங்களிடத்தில் எந்தக் காரியமும் கூறவில்லையென்றால் என்னவாகும்? அப்படியே அருகில் கடந்து சென்று அவள் மேல் கரங்களை வைத்தால், அவள் சுகமடைவாள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என்னக் கோளாறு என்று அவர்கள் காண்கிறார்கள். அவள் சுகமடைவாள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்கே வாருங்கள். நான் இந்தப் பிசாசை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கடுஞ்சினத்தோடு எதிர்கிறேன். தேவனுடைய வல்லமை அந்தக் குழந்தையை சுகப்படுத்துவதாக. ஆமென். சந்தேகப்படாதே, சந்தேகமேப்படாதே, அவள் குணமடைவாள். உன்னுடைய முழு இருதயத்தோடு விசுவாசி. தேவன் உங்களை குணமாக்கவில்லையென்றால், நீங்கள் என்றாவது ஒரு நாள் மூட்டு வீக்கத்தினால் ஒரு ஊன்று கோலோடு இருப்பீர்கள். ஆனால் தேவன் உங்களுடைய மூட்டு வீக்கத்தை குணப்படுத்துகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் போய், “கர்த்தாவே உமக்கு நன்றி. நான் உம்மை விசுவாசிப்பேன், நீர் என்னை சுகப்படுத்தும்” என்று கூறுங்கள். சரி. இப்பொழுது வாருங்கள். அது உண்மையாகவே உங்களுடைய வயதினருக்கு உண்டாகும். நீங்கள் உண்மையாகவே நரம்புணர்வு பாதிப்படைந்திருக்கிறீர். உண்மையாக மாலை மயங்கும் வேளையில் நரம்புத் தளர்வுறுகிறீர்கள். நீங்கள் பணிபுரியும்போதும் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது, நீங்கள் உண்மையாகவே நரம்புத் தளர்வுறுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? ஆகையால் அது இனி ஒருபோதும் உங்களைப் பாதிக்காது. உங்களுடைய பாதையில் சென்று கொண்டே, “கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி” என்று கூறுங்கள். ஐயா, வாருங்கள். தேவன் இருதயக் கோளாறை சுகப்படுத்துகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (அந்த சகோதரன், “ஆம்” என்று கூறுகிறார். ஆசி.) உங்களுடைய இருதயம் குணமாகுமா? அப்படியே தொடர்ந்து முன்சென்று, “கர்த்தாவே, உமக்கு நன்றி, நான் என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். 70தேவன் எலும்புருக்கி நோயை சுகப்படுத்தி அதிலிருந்து கூட குணமாக்குகிறார். ஐயா, நீங்கள் அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? (அந்த சகோதரன், “நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுகிறார்.—ஆசி.] சரி. உங்கள் வீதியில் களிகூர்ந்துகொண்டே சென்று, “கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி” என்று கூறுங்கள். அங்கே உள்ள உங்களைக் குறித்து என்ன? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கூட்டத்தாரைக் குறித்து எப்படி? இப்பொழுது கூட்டத்தில் உள்ள உங்களில் சிலர் விசுவாசிக்கிறீர்கள். இந்த மனிதன் இங்கே மார்புச் சளியோடு அமர்ந்திருக்கிறார், தேவன் மார்ப்புச் சளித் தொல்லையை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, அப்படியானால் நீங்கள் கேட்டுக்கொண்டதைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆமென். அங்கே அவருக்குப் பின்னால் சரியாக உயர் இரத்த அழுத்தத்தோடு உட்கார்ந்திருக்கிறார். உங்களுடைய உயர் இரத்த அழுத்தத்தை தேவன் குணப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஐயா, அது உங்களை விட்டுப் போய்விட்டது. எனக்கு அவரைத் தெரியாது, அவரை என் வாழ்க்கையில் கண்டதேயில்லை. 71ஐயா, உங்களுடைய தசைகளில் நரம்புப் பிடிப்புகள், நரம்புத்தளர்சியோடு தசையில் நரம்புப் பிடிப்புகள் உள்ளன என்பதை நீர் நம்புகிறீரா? தேவன் அதைக் குணப்படுத்துவார் என்று நீர் விசுவாசிக்கிறீரா? நீர் விசுவாசிக்கிறீரா? நீங்கள் விசுவாசித்தால் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சரி.. உங்களுடைய மனைவி அங்கே அமர்ந்திருக்கிறாள், அவள் எலும்பு உட்புழைத் தொல்லையினால் அவதியுறுகிறாள். சகோதரியே, அதுவும் கூட உங்களை விட்டுச் செல்லுகிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அங்கே நமக்கு பின்னாக் சரியாக அமர்ந்துள்ள பெண்மணி நரம்புத்தளர்வுற்றிருக்கிறாள். பெண்மணியே, தேவன் உங்களுடைய நரம்புத்தளர்வை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 72இங்கே ஒரு பெண்மணி ஒரு சிறு மேற்சட்டையோடு, மேலே சிவப்பு மேற்சட்டையோடு இங்கிருக்கிறாள். அவள் அங்கே அமர்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கும் கூட எலும்பு உட்புழைத் தொல்லை உள்ளது. தேவன் உங்களுடைய எலும்பு உட்புழைத் தொல்லையை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசித்தால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். இயேசு கிறிஸ்துவின் விசேஷ குணங்கள் இன்றிரவு நமக்கு மத்தியில் இருக்கின்றன என்று விசுவாசிக்கிறவர்கள் எவரேனும் இங்கிருந்தால், உங்களுடைய கரத்தை உயர்த்தி, “நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். [சபையோர் களிகூர்ந்து, “நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுகின்றனர். -ஆசி.] அவரை உங்களுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்ள இங்குள்ள யாவரும் எழும்பி நின்று, “நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். எழும்பி நில்லுங்கள். நீங்கள் எங்கேயிருந்தாலும் உங்களுடைய நாற்காலிகளிலிருந்து எழும்பி நில்லுங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நான் அவரை தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் உங்களிடம் அளிக்கிறேன்.